மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட அல்லு சிரிஷ்

இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட  அல்லு சிரிஷ்

தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் தனது நடிப்பில் உருவாகும், 'பிரேம கதந்டா' படத்திற்கான முதல் பார்வை வெளியீட்டில் புதிய ட்ரெண்டை புகுத்தியுள்ளார். ஒரே நாளில் தனது புதிய படத்துக்கான இரண்டு முதல் பார்வை போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

இது தெலுங்கு திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறது. தெலுங்கு பட உலகில் இப்படியாக இரண்டு முதல் பார்வை வெளியாவது இதுவே முதன்முறை. முன்னதாக, இதே படத்துக்காக இரண்டு ப்ரீ லுக் போஸ்டர்களை அவர் வெளியிட்டார். அதிலும் ஒரு ட்ரெண்ட் உருவாக்கியிருந்தார். இப்படியாக இந்தப் படத்திற்கு பல புதுமைகளை அல்லு சிரிஷ் புகுத்துவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்போது அவர் இரண்டு முதல் பார்வையை பகிர்ந்துள்ளது ரசிகர்களை இன்னும் துள்ளல் மனநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. படத்தைப் பற்றி மேலும் தகவல்கள் கிடைக்காதா என்ற அவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

’பிரேம கதந்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படம், தற்கால உறவுச்சிக்கல்கள் பற்றி பேசுகிறது. இன்று வெளியிடப்பட்ட இரண்டு முதல் பார்வை போஸ்டர்களில் ஒன்று அழுத்தமான உணர்வுகளைக் கடத்துவதாகவும், இன்னொன்று நாயகன், நாயகியின் யதார்த்தமான மிரர் செல்ஃபி புகைப்படம் கொண்டதாகவும் உள்ளது.

பிரேம கதந்டா படத்தை ராகேஷ் சசி இயக்கியுள்ளார். படத்தை, GA2 பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 30 மே 2021