மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

தடுப்பூசி உயிரை காக்கும் : நடிகர் சிவகார்த்திகேயன்

தடுப்பூசி உயிரை காக்கும் : நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழகத்தில் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு சினிமா நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். பேரிடர் காலங்களில் அரசுக்கு நிவாரண நிதி வசூலிக்க அல்லது அது சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா கலைஞர்களின் ஈடுபாடு அல்லது பங்களிப்பு தேவைபடுகிறது.

கெரோனாவின் இரண்டாம் அலையில் 30க்கும் மேற்பட்ட சினிமா விஐபிக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். புகை, மது, பான்பராக் என்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், திரைப்பட விமர்சகர் என திரையுலகுக்கு நன்கு அறிமுகமான சுபாவெங்கட் கொரோனா தொற்றால் 29.05.2021 அதிகாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

இந்த மரணம் திரையுலகினர் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா அறிகுறி ஏற்பட்டவுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதன் பின் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இறுதியாக சென்னை அப்பல்லோவில் 25 நாட்களாக சிகிச்சை, தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்தும் சுபா வெங்கட்டை காப்பாற்ற முடியவில்லை.

என்ன காரணம் என்று நெருக்கமாக சென்று விசாரித்தபோது, அவரது நெருக்கமான நண்பரும், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளருமான அம்மா கிரியேஷன் சிவா கூறியது...

கொரோனா இரண்டாம் அலை தொடக்கத்திலேயே 40 வயதுக்கு மேற்பட்டவர்களைதடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. நாங்கள் எல்லோரும் போட்டுக்கொண்டோம். அதேபோல் சுபா வெங்கட்டை தடுப்பூசி போட்டுக்கொள்ள நண்பர்கள், அவரது நெருக்கமான உறவினர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர் கடைசிவரை போட்டுக்கொள்ளவில்லை. அதுவே இன்றைக்கு அவரை பலிகொண்டுவிட்டது. கெரோனா தொற்று அறிகுறி ஏற்படும் முன்னரே தடுப்பூசியை போட்டு கொண்டிருந்தால் ஒரு வேளை அவரை காப்பாற்றி இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாக கூறினார்.

கொரோனா இரண்டாம் அலையை முன்னிட்டு சிவகார்த்திகேயன், தன் ரசிகர்களுக்கு தனியாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதில், என் ரசிகர்கள், என் தம்பி தங்கச்சிகள் அனைவருக்கும் வணக்கம். உங்களிடம் தனித்தனியாக பேசமுடியவில்லை அதனால்தான் இந்த வாய்ஸ் நோட் எல்லோரும் பத்திரமாக இருக்கிறீகள் என்று நம்புகிறேன். தயவு செய்து ரொம்ப ரெம்ப அவசியம் என்றால் மட்டும் நீங்கள் வெளியே போகணும். எப்பொழுதும் மாஸ்க் அணியுங்கள். டபுள் மாஸ்க்லாம் சொல்றாங்க அதை போட்டுக்கொள்ளுங்கள். நிறைய பேரு மாஸ்க் கரெக்டா போட்டவங்க கொரோனாவில் இருந்து தப்பியதை எல்லாம் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் கேட்டு விட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நான் போட்டுவிட்டேன் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை ரெம்ப ரெம்ப முக்கியமாக பார்த்துக்கனும். வீட்டுக்குள்ள பத்திரமாக இருங்கள். இது சீக்கிரம் முடிந்துவிடும் நாம் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடலாம். சீக்கிரமாக படத்தின் மூலம் உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 30 மே 2021