மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

ஒருவழியாக நரகாசூரனுக்கு விடுதலை ; ரிலீஸ் திட்டம் இதுதான்!

ஒருவழியாக நரகாசூரனுக்கு விடுதலை ; ரிலீஸ் திட்டம் இதுதான்!

திரையரங்குகள் மீண்டும் திறப்பது எப்போது, அப்படியே திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் கூட்டம் வருமா எனும் சந்தேகம் திரையுலகில் மய்யம் கொண்டுள்ளது. எந்த சிக்கலும் இல்லாமல் குறித்த நேரத்தில் தயாராகி, வெளியாகும் படங்களே ஓடிடி பக்கம் சென்றுவிட திட்டம் தீட்டி வருகிறது. இந்தச் சூழலில் பல வருடங்களாக ரிலீஸ் தாமதமாகும் படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நீண்ட நாளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வெளியானது. தொடர்ந்து, மற்றுமொரு படமும் ரிலீஸூக்கான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது. முதலில் திரையரங்க ரிலீஸை திட்டமிட்டார்கள். இப்போது, ஓடிடி மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அரவிந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா சரண் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்ட நடிகர்கள் லீட் ரோலில் நடிக்க இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து படம் தயாராகிவிட்ட நிலையிலும், நீண்ட நாளாக ரிலீஸாக முடியாமல் இருக்கிறது.

‘துருவங்கள் பதினாறு’ எனும் ஹிட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவரின் இரண்டாவது படமாக உருவானது தான் நரகாசூரன். ஆனால், இந்தப் படத்துக்குப் பிறகு உருவான ‘மாஃபியா சேப்டர் 1’ படம் வெளியாகிவிட்டது. அருண்விஜய் இந்தப் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, தனுஷ் நடிக்க தனுஷ் 43 படத்தையும் துவங்கிவிட்டார் கார்த்திக் நரேன். ஆனால், இன்னும் நரகாசூரன் வெளியாகவில்லை.

லேட்டஸ்ட் தகவலின் படி, நரகாசூரன் படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஜூன் மாதத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நரகாசூரன் வெளியாகவில்லையே என சந்திக்கும் நபர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார் கார்த்திக் நரேன். ட்விட்டரிலும் அவ்வப்போது ஆதங்கத்தை தெரிவித்து வந்தார். இப்போது, நரகாசூரனுக்கு விடுதலை கிடைத்துவிட்டது.

- தீரன்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

சனி 29 மே 2021