மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

இரண்டு பாடல்கள் ஷூட்டிங் தாமதத்துக்கு காரணம் ; ராஜமெளலி திட்டம்

இரண்டு பாடல்கள் ஷூட்டிங் தாமதத்துக்கு காரணம் ; ராஜமெளலி திட்டம்

பாகுபலி எனும் பிரம்மாண்ட படைப்பைக் கொடுத்த இயக்குநர் ராஜமெளலி. தமிழில் ஷங்கர் மாதிரி, தெலுங்கு சினிமாவுக்கு ராஜமெளலி. பிரம்மாண்ட கதைக்களம், பெரும் பொருட்செலவில் காட்சியமைப்பு என மிரட்டும் இவரின் அடுத்தப் படம் ‘ஆர். ஆர். ஆர்.’

படம் துவங்கிய நேரத்தில் இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ என பெயர் வைத்தனர். அதற்கு காரணம், இயக்குநர் ராஜமெளலி மற்றும் நடிகர்களான ராம் சரண் & ராமா ராவ் என்கிற ஜூனியர் என்.டி.ஆர். இவர்களின் முதல் எழுத்தை வைத்து படத்தின் பெயரை உறுதி செய்தனர். பிறகு, படத்தின் பெயரையும் இதற்குள் இணைத்தனர். அப்படித்தான், ரணம் இரத்தம் ரெளத்ரம் (ஆர்.ஆர்.ஆர்.) என படத்தின் பெயர் வந்தது. பாலிவுட் நட்சத்திரங்களான அலியா பட் மற்றும் அஜய்தேவ்கன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். பாகுபலியைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் இசை கீரவாணி.

படம் துவங்கியதிலிருந்தே படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆந்திராவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்திருந்தால் எப்படி இருக்கும் என்கிற ஒன்லைனுடன் முழு படத்துக்குமான திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் திரைக்கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்.

ரிலீஸூக்கு முன்பாகவே படத்தின் விற்பனையும் நடந்துமுடிந்துவிட்டது. ஆனால், படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை என்பதே உண்மை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒரண்டு பாடல்கள் மற்றும் சில மாண்டேஜ் ஷாட்டுகள் எடுக்க வேண்டி இருக்கிறது. ஏன் இந்த காட்சிகள் எடுக்க தாமதமாகிறது என்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம். ஒரு பாட்டுக்கு என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் இருவருமே நடிக்க வேண்டுமாம். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் கொண்ட பாடல்காட்சியாக இருக்கும் என்கிறார்கள்.

இரண்டாவது பாட்டின் ஷூட்டிங்கில் ராம்சரணும், அலியா பட்டும் கலந்துகொள்ள வேண்டுமாம். முழுக்க முழுக்க ரொமாண்டிக்கான ஒரு பாடலாக இருக்கும் என்கிறார்கள். படத்தை அக்டோபர் 13ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில், மீதமிருக்கும் பாடல் காட்சிக்கான ஷூட்டிங் எப்போது துவங்கும் என விசாரித்தால், கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததும், முதலாவதாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் ராஜமெளலி.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

4 நிமிட வாசிப்பு

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

சனி 29 மே 2021