மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

ட்விட்டரில் என் பெயரில் போலி கணக்கு - நடிகர் மயில்சாமி

ட்விட்டரில் என் பெயரில் போலி கணக்கு - நடிகர் மயில்சாமி

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சினிமா, அரசியல் பிரபலங்களின் போலியான

கணக்குகள் தொடங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

இதை சம்பந்தப்பட்டவர்கள் அவ்வப்போது கண்டுபிடித்து அறிவித்தாலும், போலி கணக்குகள் தொடர்கதையாகி வருகின்றன. இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. உண்மையான கணக்குகளைக்கூட சந்தேகிக்க தோன்றுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக நடிகர் மயில்சாமி பெயரில் ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக முன்னணி இணையதளங்களில் செய்தி வெளியானது. பொதுவாக நடிகர் மயில்சாமி சமூக வலைதளப் பக்கங்களில் வருகின்ற எந்த செய்தியையும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட மயில்சாமி ட்விட்டர் கணக்கு தொடங்கியுள்ளதாகச் செய்தி வெளியானதைப் பார்த்து செய்தியாளர்கள் பலர் மயில்சாமியைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்க முற்பட்டபோது ஆச்சர்யத்துடன் அதை கேட்டுகொண்ட மயில்சாமி உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் 'என்னுடைய பெயரில் இருக்கும் ட்விட்டர் அக்கவுன்ட்டுகள் எதற்கும் நான் பொறுப்பல்ல' என்றும் 'அந்தப் பக்கங்களை யாரும் பின்தொடர வேண்டாம்' எனக் கூறியுள்ளார்.

-இராமானுஜம்

.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 28 மே 2021