மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

சண்டை செய்யலாம்: அப்டேட் குமாரு

சண்டை செய்யலாம்: அப்டேட் குமாரு

ட்விட்டர்ல சண்டை போட்டு பாத்திருக்கோம், ஃபேஸ்புக்ல சண்டை போட்டு பாத்திருக்கோம். ட்விட்டரோட, ஃபேஸ்புக்கோட சண்டை போட்டு பாத்திருக்கோமா.... ஐய்யா கொரோனாவோட சண்டையில முதல்ல ஜெயிப்போம், அப்புறம் ட்விட்டரோட சண்டைசெய்யலாமே.... நீங்க அப்டேட் பாருங்க

ச ப் பா ணி

நேரா நேரத்துக்கு சாப்பிட வேண்டுமென

அம்மாவால் கிளப்பிவிடப்பட்ட

வதந்திதான்

அவன் பசி தாங்கமாட்டான் என்று"!

amudu

மின்வாரியம், போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். -ஓ.பி.எஸ்.

உங்க ஆட்சியில் செய்யாத பணிகள், இப்போ தான் ஒவ்வொன்றாக தெரியுது போல.

Mannar & company

க்ளைமேட் மோடி ப்ரெண்ட்லியா இருக்கும் போல..

எப்படி

இல்லைன்னா.. வெளிநாடுகளுக்கு விமானத்துல பறக்காம இருக்கிற காரணத்துல அடிக்கடி புயல் வந்து ஹெலிகாப்டர்ல சுத்தி பார்க்கிற வாய்ப்பை கொடுக்குதே.

மெத்த வீட்டான்

உலக நாடுகள் கொரோனாவுடன் போராடுவதை ட்விட்டரில் பதிவு செய்கின்றன

இந்தியாவில் ட்விட்டரோடு போராடுவதை மோடி அரசு பதிவு செய்கிறது !

amudu

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும்.

-முதல்வர் ஸ்டாலின்.

கொரோனாவையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவுவெடுங்க. ஆமா..

நாகராஜசோழன்.MA.MLA

50% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம்: ஜோ பைடன் பெருமிதம்

ஊர்ல இருக்கற எல்லா மயாணமும் பிஸியாக இருக்க வெச்சிருக்கோம்.~ இந்திய பெருமிதம்.

பழைய சோறு

விலைக்கூவல்களே

இறந்த மீன்களுக்கான

ஒப்பாரி..!

மயக்குநன்

பிள்ளைகள் சொல்லும் பிரச்சினைகளை பெற்றோர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும்!- கமல்.

நீங்களும் அப்படிக் கேட்டிருந்தா, நிர்வாகிகளும் கட்சியை விட்டு விலகி இருக்க மாட்டாங்களே தலைவரே..?!

கோழியின் கிறுக்கல்!!

ஆதிக் குடிகள் அம்மணத்தை மறைக்க ஆடை அணிந்தது வரலாற்றில் பதிந்தது போல,

நாம் முக கவசம் அணிந்ததும் வரலாற்று நிகழ்வாக எதிர்காலம் பேசப்படலாம்!!

-லாக் ஆஃப்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வெள்ளி 28 மே 2021