மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் : விஷால் கருத்து!

பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் : விஷால் கருத்து!

சென்னை கே.கே. நகரில் இருக்கும் பி.எஸ்.பி.பி. பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ராஜகோபாலன் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜகோபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுசம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால்

பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தூக்கிலிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பி.எஸ். பி.பி. பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன் என, கமலஹாசன் சில தினங்களுக்கு முன்பு தாமதமாக கருத்து தெரிவித்திருந்தார். "சாதிப் பிரச்சினை" என்று கமல் குறிப்பிட்டிருந்ததற்கு கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்பும் எழுந்தன.

கமல்ஹாசனைப் போன்றே பள்ளி விவகாரத்தில் தாமதமாக கருத்து தெரிவித்திருக்கும் விஷால் தனது ட்விட்டர் பதிவில் பி.எஸ்.பி.பி. பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது, என்னை தலைகுனிய வைத்தது. மேலும் அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. மாணவிகளிடமோ, பெற்றோரிடமோ ஒருவர் கூட ஒருமுறை கூட மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற குற்றங்களை லேசில் விடக் கூடாது. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு என் நண்பரான பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விவகாரத்தை சாதிப் பிரச்சனையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடு. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியரை தூக்கிலிட வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற குற்றங்களை உடனே கவனிக்க வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் புரியும்.

தற்போதாவது மாணவிகள், பெற்றோர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். மேலும் இதை "சாதி பிரச்சனையாக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்

நடிகர் விஷால் திரையுலக வாழ்க்கையில் நடிகர் சங்க தேர்தல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கதேர்தல்களில் முறையே செயலாளர், தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது அவரது வேட்பு மனுவை வழிமொழிந்தவர் நடிகர் கமல்ஹாசன் அதனால்தானோ கமல்ஹாசன் சம்பந்தமில்லாமல் குறிப்பிட்டுசென்ற "சாதிப்பிரச்சினையாக திருப்பும் முயற்சி" என்பதை வழிமொழியும் விதமாக விஷால் கருத்து இருக்கிறது என கருத வேண்டியுள்ளது.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

வெள்ளி 28 மே 2021