மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

இத்தனை படங்களா? ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் மூவி லிஸ்ட் !

இத்தனை படங்களா? ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் மூவி லிஸ்ட் !

உலகமெங்கும் படுவேகமாக ரசிகர்களை கவர்ந்ததோடு, வெறித்தனமாக கல்லாக்கட்டும் மூவி சீரிஸ்களில் ஒன்று ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ். அனல் பறக்கும் கார் சாகசமே பிரதானம். அதற்குள் செண்டிமென்டோடு கதையைச் சேர்த்துக் கொடுத்தார் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் ரெடி.

கார் ரேஸ், கார் ஹேக்கிங், கார் சண்டை, பறக்கும் கார், தண்ணியில் ஓடும் கார், நெருப்பை தகர்க்கும் கார் என காரை வைத்து இப்படியெல்லாமா பண்ணுவீங்க என ஒவ்வொரு படத்திலும் மிரட்டிவிட்டிருப்பார்கள். இந்தியாவில் இந்தப் படம் வெளியானாலே கொண்டாட்டம் தான். அஜித், விஜய் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்குமோ, அதற்கு இணையான வரவேற்பு இப்படங்களுக்கும் இருக்கும். வின் டீசல், ஜேசன் ஸ்டாதம், ட்வெய்ன் ஜான்சன், டோனி ஜா, மிட்செல் ராட்ரிக்ஸ் போன்ற நடிகர்கள் இருப்பதால் மட்டும் படம் ஹிட் கிடையாது. படத்துக்குள் நடுநடுவே வரும் ‘வ்வ்ரூம்... வ்வ்ர்ர்ரூம்’ எனும் கார் சாகசங்களை திரையில் பார்ப்பதே அட்டகாசமாக இருக்கும். இதுவரை எட்டு பாகங்கள் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், ஜெஸ்டின் லின் இயக்கத்தில் ஃபார்ஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 படமானது உருவாகிவருகிறது. படப்பிடிப்பெல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகிறது. படத்தின் ரிலீஸூக்காக படக்குழுவும், ரசிகர்களும் வெயிட்டிங். எட்டாவது பாகத்தின் ட்ரையாலஜியாக ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாகங்கள் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

ஒன்பதாவது பாகத்தை இயக்கிவரும் ஜஸ்டின் லின் தான் 10வது பாகத்தையும் இயக்க இருக்கிறார். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஒன்பதாவது பாகம் வருகிற ஜூன் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு துவங்கியிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து. ஜஸ்டின் லீன் ஃபாஸ்ட் 10 படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்த இருக்கார். புது அப்டேட் என்னவென்றால், இந்த பத்தாவது பாகம் இரண்டு வால்யூமாக வர இருக்கிறதாம்.

ஃபாஸ்ட் 10 படத்தின் முதல் வால்யூம் 2023-ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். அதோடு, இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு 2022ல் துவங்க இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியர்ஸ் டீமில் வரும் பெண் லீட் கேரக்டர்களை வைத்து ஒரு ஸ்பின் ஆஃப் எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் ட்வெய்ன் ஜான்சன் & ஜேசன் ஸ்டாதம் இருவரும் நடிக்க ‘ஹாப்ஸ் அண்ட் ஷா’எனும் ஸ்பின் ஆஃப் வெளியாகி ஹிட்டானது. அந்த ஸ்டைலில் லீட் நாயகிகள் நடிக்க ஸ்பின் ஆஃப் வர இருக்கிறது. இதற்கு நடுவே, ‘ஹாப்ஸ் அண்ட் ஷா’ பாகம் 2 எடுக்கவும் ஒரு பக்கம் திட்டமிட்டு வருகிறார்களாம்.

- ஆதினி

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வெள்ளி 28 மே 2021