மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

விஜய்யைத் தொடர்ந்து அஜித்தை டிக் செய்த ஹீரோ !

விஜய்யைத் தொடர்ந்து அஜித்தை டிக் செய்த ஹீரோ !

எத்தனையோ தெலுங்கு படங்களின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்திருக்கிறார். அஜித் ஆரம்ப காலக்கட்டத்தில் கமர்ஷியல் ஹிட்டுக்கு சில தெலுங்கு படங்களின் உதவியை நாடினார் . அந்த வரலாறு ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது, தமிழின் டாப் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் ஹீரோவான அஜித்தின் பழைய படமானது இப்போது, தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது.

அஜித் நடிப்பில் 2015ல் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா, அனுஷ்கா, அனிகா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. அஜித்தை ஸ்டைலிஷ் ஹீரோவாக திரையுலகின் உச்சாணிக்கு கொண்டுசென்றது என்னை அறிந்தால். இப்படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய்க்கு திரையுலகில் கம்பேக் கொடுத்த படமும் இதுதான். ஹீரோவுக்கு இணையாக வில்லன் ரோலும் அதிகமாகப் பேசப்பட்டது.

போலீஸ் அதிகாரியாக அஜித் அசத்தியிருப்பார். இந்த ஸ்டைலிஷ் கமர்ஷியல் படமானது தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரபாஸ் நடித்து வெளியான சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இந்தப் படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்.

சாஹோ படத்தையே பெரும் பொருட்செலவில் இண்டர்நேஷனல் ஸ்டைலில் எடுத்துவைத்தவர் சுஜீத். படம் ஓடியதா, இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால், மேக்கிங்கில் மிரட்டும் வித்தைக்காரர். இவரின் கையில் என்னை அறிந்தால் ஸ்கிரிப்ட் சென்றால், சிரஞ்சீவிக்கு வித்தியாசமான லுக் கிடைக்கும் என்று சொல்கிறது தெலுங்கு வட்டாரம்.

தற்பொழுது, மோகன்லால் நடித்து வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்தப் படத்தையும் முடித்த கையோடு, சுஜீத் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னை அறிந்தால் தெலுங்குக்கு செல்வதால், அந்த ஊர் ரசிகர்களின் சுவைக்கு ஏற்றமாதிரி கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் கூறுகிறார்கள். சிரஞ்சீவி குறித்து மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், நடிப்பை விட்டுவிட்டு அரசியல் களத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குதித்தார். அரசியல் வேலைக்காகாததால், மீண்டும் திரையுலகுக்கு கம்பேக் கொடுத்ததும் ஒரு தமிழ் ரீமேக் படம் மூலமாக தான். விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ படத்தை தெலுங்கில் ‘கைதி நம்பர்.150’ எனும் பெயரில் ரீமேக் செய்து ஹிட் கொடுத்தார். இப்போது, அஜித் படத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.

- ஆதினி

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

வியாழன் 27 மே 2021