மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

கொரோனோவும் கொரோனோ சார்ந்த இடமும்: அப்டேட் குமாரு

கொரோனோவும் கொரோனோ சார்ந்த இடமும்: அப்டேட் குமாரு

மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி, காடும் காடுசார்ந்த நிலமும் முல்லை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலும் கடல் சார்ந்த நிலமும் , நெய்தல் மணலும் மணல் சார்ந்த இடமும் பாலைங்கிற ஐவகை நிலங்கள் மாதிரி இப்ப கொரோனாவும் கொரோனா சார்ந்த இடமும் மார்க்கெட், துணிக்கடை, மளிகை கடைகள்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. உஷாரா இருங்க மக்களே!!!

இப்ப அப்டேட் பாருங்க....

பர்வீன் யூனுஸ்

ஆன்லைன் கிளாஸ் யுகத்தில் மழை பெய்வதையும் புயல் அடிப்பதையும் விழலுக்கு இறைத்த நீராகவே கருதுகின்றனர் மாணவ மாணவியர்.

நாகராஜசோழன்.MA.MLA

சென்னை யை ஓவர் டேக் பண்ணி கோவை லீடிங் ல இருக்கு

தொழில் வளர்ச்சிலயா மாப்ள

கொரோனா பரவல் ல மாமா...

balebalu

ஆயிரம் ரூபாய் மதிப்பு இழந்தது போல் இப்போ ஞாயிற்றுக்கிழமையும் மதிப்பிழந்தது

TNLockdown

நாகராஜசோழன்.MA.MLA

தமிழகத்தில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்!

கொரோனா உசுரு பயத்த காட்டீடுச்சு பரமா...

மயக்குநன்

தொடர்ந்து நடிக்கும் எண்ணம் உள்ளது, கடவுள் மனது வைக்க வேண்டும்!- ரஜினி.

இப்போதைக்கு கொரோனாதான் மனசு வைக்கணும் தலைவரே..!

amudu

அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும். -கமல்.

ஆனால்... மக்கள் நீதி மய்யத்தில் தான் யாரும் இருக்க மாட்டாங்க.

ச ப் பா ணி

தெரிந்ததை தெரியாதது போலவும்,

தெரியாததை தெரிந்தது போலவும்

காட்டிக் கொள்ளும் இடமே இணையம்

சரவணன். ℳ

இந்த கொரோனா சமயத்துல கடவுள்களுக்கு பவர் இருக்குன்னு நிரூபணம் ஆகிடுச்சு..

கோவைல கொரோனா தேவி ன்னு சொன்னாங்க.. ஒடனே கொரோனா வேகமா பரவி ஊரே முதல் இடத்துக்கு வந்துடுச்சு..

mohanram.ko

நீ 'தொட்டதெல்லாம் துலங்கும்'னு ஜோசியர் சொன்னாரேன்னு பெருமையா சிரிச்சா.....கழுவ பாத்திரமெல்லாம் கொண்டு வந்து போடுறாங்க மனைவி....

மயக்குநன்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசிடம் 'வரைவு அறிக்கை' தாக்கல் செய்யப்பட்டுள்ளது!- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

'விரைவு' அறிக்கையா மத்திய அரசுகிட்ட இருந்து பதில் வந்து சேர்ந்தா சரி..!

கோழியின் கிறுக்கல்!!

கோடை விடுமுறைக்கு‌ மனைவி தம் தாய் வீட்டுக்கு சென்று, கணவனுக்கு விடுமுறை அளித்த சுகானுபவம் அடுத்த வருடமாவது கிடைக்கப் பெற கொரோனா தேவி நல்லாசிப் புரிய வேண்டும்!!

-லாக் ஆப்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

வியாழன் 27 மே 2021