மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

மார்வெலின் கடைசி சூப்பர் ஹீரோ படம்.. ரசிகர்கள் ஏமாற்றம் !

மார்வெலின் கடைசி சூப்பர் ஹீரோ படம்.. ரசிகர்கள் ஏமாற்றம் !

ஹாலிவுட் ரசிகர்களுக்கு சூப்பர் ஹீரோ படங்களை எக்கச்சக்கமாக கொடுத்தது மார்வெல் மற்றும் டிசி நிறுவனங்கள் தான். குறிப்பாக, மார்வெலுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸின் படங்களின் வரிசையில் ஒன்று தான் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’. இதுவும், அவெஞ்சர்ஸ் பட லிஸ்டுக்குள் வரும் திரைப்படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமானது தற்பொழுது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ஜேம்ஸ் கன் இயக்க இருக்கிறார். முந்தைய இரண்டு பாகங்களையும் இவர் தான் இயக்கியிருந்தார். அதோடு, வில் ஸ்மித் நடித்திருந்த ‘சூசைட் ஸ்குவாட்’ படத்தின் இயக்குநரும் இவர் தான்.

இப்போ, ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3’ படத்தின் முதல் கட்டப் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் க்ரிஸ் ப்ராட், வின் டீசல், பிராட்லி கூப்பர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். இவர்களோடு, தோருக்கும் முக்கிய கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்துக்கான கதையை 1999ல் ரிலீஸான 'Farscape'எனும் பிரபலமான சையின்ஸ் பிக்‌ஷன் சீரிஸை தழுவி உருவாக இருக்கிறதாம். 1999-ல் அந்த சீரிஸ் மிகவும் பிரபலாக இருந்ததால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியிருக்கிறது.

முந்தைய இரண்டு பாகங்கள் போல் இல்லாமல், கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமென்பதால், இந்தப் படத்துக்கு ‘தி கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி ஹாலிடே ஸ்பெஷல்’ எனும் டைட்டிலை உறுதி செய்திருக்கிறார்கள். இந்தப் படங்களில் ஏலியன் சூப்பர் ஹீரோவாக Drax கேரக்டரில் இதுவரை நடித்து வந்த குத்து சண்டை வீரர் டேவ் பாட்டிஸ்டா , இந்த மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை. இந்தப் படத்திலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, இயக்குநர் கன் இயக்கும் கடைசி மார்வெல் சூப்பர் ஹீரோ படமாக இது இருக்கும் என்று அறிவித்திருக்கும் நிலையில், டேவ் பாட்டிஸ்டாவும் படத்திலிருந்து விலகியிருப்பதால் மார்வெலின் கடைசி கேலக்ஸி கார்டியன் சூப்பர் ஹீரோ படமாக இது தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஏனெனில், இயக்குநர் ஜேம்ஸ் கன் & ஹீரோ டேவ் பாட்டிஸ்டா இருவருமே இந்த கார்டியன்ஸ் படங்களின் உயிர்நாடி. இருவருமின்றி, எந்த இயக்குநராலும் இந்தப் படத்தை மீண்டும் உருவாக்க முடியாதென்பதே ரசிகர்களின் எண்ணம். அப்படி இருக்கையில், மார்வெலின் கடைசி கார்டியன் படமாக இது இருக்கும் என்கிறார்கள்.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வியாழன் 27 மே 2021