மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

அட்லீ - ஷாரூக் கூட்டணி... கிடைத்த புது தகவல்!

அட்லீ - ஷாரூக் கூட்டணி...  கிடைத்த புது தகவல்!

விஜய்க்கு பிகில், தெறி மற்றும் மெர்சல் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீ, அடுத்தக் கட்டமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை இயக்க இருக்கிறார். அட்லீ - ஷாரூக் கூட்டணி குறித்து பல தகவல்கள் கசிந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சம்பவம் நடந்தது. ஷாரூக்கின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடமிருந்து ஒரு அழைப்பு அட்லீக்கு வந்தது. “எல்லாம் தயார்... உடனடியாக, கதையை முடித்துவையுங்கள். விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்” என ஷாரூக் தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல் வந்ததும், அட்லீயின் அலுவலகமே சூடு பிடித்தது. படத்தின் கதை உருவாக்கும் பணியில் இறங்கினார் அட்லீ.

அட்லீ உருவாக்கும் இந்தக் கதையை தயாரித்து, நடிக்க இருக்கிறார் ஷாரூக். தற்பொழுது, படத்துக்கான முழு திரைக்கதை வடிவத்தையும் தயார் செய்துவிட்டாராம் அட்லீ. அந்தக் கதையும் ஷாரூக்கானுக்குப் பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதோடு, மும்பையில் இருக்கிறாராம் அட்லீ. நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை இறுதி செய்யும் பணிகள் போய்க் கொண்டிருப்பதாகவும் தகவல். இரண்டு கேரக்டர்களில் ஷாரூக் நடிக்க இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்றும் ஏற்கெனவே தகவல் கிடைத்திருந்தது. அதில் ஒரு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஆகஸ்டில் துவங்க வேண்டிய படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்பிருக்காம். அதோடு, மும்பையில் கொரோனா பாதிப்பு குறையத் துவங்கியதும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்துவிடும். எப்போது அனுமதி கிடைக்கிறதோ, அப்போதே படத்தை துவங்கிவிடலாம் என்று திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

சித்தார் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக். இந்தப் படத்தைத் தொடர்ந்து தான் அட்லீ படம் துவங்குகிறது. அட்லீ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஷாரூக்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 27 மே 2021