மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

காய்கறி பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு

காய்கறி பாலிடிக்ஸ்:  அப்டேட் குமாரு

ஓர் எழுத்தாளர் ஊரடங்கு நேரத்துல நேத்து வீட்டு வாசலுக்கே காய்கறிக்கடை வந்து சல்லீசா காய்கறிகளை கொடுத்ததா ஒரு ஸ்டேட்டஸ் போட்டு, ‘தலைமைச் செயலாளர் இறையன்புக்கு நன்றி’னு போட்டிருந்தார். இன்னிக்கு ஒரு எழுத்தாளர் அதே காய்கறி கடை தன் வீட்டு வாசலுக்கு வந்ததா சொல்லி போட்டோவோட ஒரு ஸ்டேட்டஸ் போட்டு, ‘முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’னு போட்டிருந்தாரு. இப்படி காய்கறி விசயத்துல கூட பாலிடிக்ஸ் கூட்டு வச்சிக்கிட்டிருக்காங்க. நான் சத்தியம் பண்ணி சொல்றேன்...இந்த ரெண்டு எழுத்தாளர்ல ஒருத்தராச்சும் வீட்டு வாசலுக்கு வந்த காய்கறி விக்கிறவருக்கு நன்றி சொல்லியிருப்பார்னு நினைக்கிறீங்க? நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாங்க.

நீங்க அப்டேட் பாருங்க...

செங்காந்தள்

உருமாறிய" மக்கள் நீதி மய்யத்ததை அனைவரும் விரைவில் காண்பார்கள்- கமல்ஹாசன்

இதுக்கு தடுப்பூசி இல்லீங்களா?

ச ப் பா ணி

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சமையல் எரிவாயு உருளை கிடைப்பதிலும் பெரும் சிக்கல்...

ஆக்சிஜன் சிலிண்டருக்கும் சிக்கல். இப்ப கேஸ் சிலிண்டருக்கும் சிக்கலா

மயக்குநன்

பாஜக ஆட்சியின் 'ஏழாவது ஆண்டு' நிறைவு கொண்டாட்டங்களை ரத்து செய்ய முடிவு!- ஜே.பி.நட்டா.

'ஏழரை' முடியும்போது கொண்டாடுங்க... கரெக்டா இருக்கும்..!

amudu

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் 7 லட்சம் பேர் சொந்த ஊருக்குப் பயணம்.

இவர்கள் வருகையால், சொந்த ஊர்கள் கலக்கம்.

பர்வீன் யூனுஸ்

ஒருத்தருக்கும் கொரோனா வராத குடும்பம் எவை என சர்வே எடுத்தால் ஒன்றுமே இருக்காது போலும்.

நாகராஜசோழன்.MA.MLA.

தமிழகத்தில் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும்.-

முதல்வர் மு.க.ஸ்டாலின்

உயிரே...உயிரே....

கொரோனாவில் இருந்து தப்பிச்சு எப்படியாவது ஓடி விடு....

balebalu

மொபைல் காண்டாக்ட் லிஸ்ட் ல இருக்குற பேசும் நபர்களை குறைத்து கொண்டே வருகிறது கொரோனா Face with open mouth and cold sweat

Corona

James Stanly

துணிக்கடையில என்ன அத்தியாவசிய பொருள்..

மாஸ்க் சார்..

தர்மஅடி தர்மலிங்கம்

95 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை;- செய்தி!

கொரோனா கூட குறைஞ்சிடும் போல ஆனால், இந்த பெட்ரோல் விலை தான் இனி குறையாது போலிருக்கு!

மயக்குநன்

அரசியல் இருக்கும்வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்!- கமல்.

அதுசரி... இந்த வார எவிக்‌ஷன் யாரு தலைவரே..?!

சரவணன். ℳ

கலர்ல 12 வகை மட்டும் தான் இருக்கு. ஆர்வக்கோளாளாறுல அதையும் தாண்டி சொல்லிடாதீங்கய்யா...

பூஞ்சை தொற்று

கோழியின் கிறுக்கல்!!

எல்லா மேகமும் நம்பிக்கை தரும்!

ஒருசில தான் மழை தரும்!!

-லாக் ஆஃப்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

புதன் 26 மே 2021