மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

சிரஞ்சீவியின் ஆக்சிஜன் வங்கி விநியோகத்தை தொடங்கியது!

சிரஞ்சீவியின் ஆக்சிஜன் வங்கி விநியோகத்தை தொடங்கியது!

கொரோனா இரண்டாவது அலையில் தடுப்பூசிக்கு அடுத்தபடியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.

திரைப்பட துறையினர் அவரவர் வசதிக்கேற்ப அரசிடம் நன்கொடையும், நேரடியாக நோயாளிகளுக்கு சூழலுக்கு ஏற்ப உதவிகள் செய்து வருகின்றனர்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி செய்ய விரும்பும் நிவாரணம், உதவிகளை அவரே நேரடியாக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இரத்த சேமிப்பு வங்கி மூலம் சேவை செய்து வரும் நடிகர் சிரஞ்சீவி, கொரோனா முதல் அலையில் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிட கொரோனா நெருக்கடி எனும் பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி உதவி செய்தார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அமுலுக்கு வந்தபோது தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியவர் , 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் தங்கள்

மனைவியையும் அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதுடன், அதற்கான கூடுதல் செலவையும் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, மகன் ராம்சரண் உடன் இணைந்து ஆக்சிஜன் வங்கி தொடங்கப் போவதாக சிரஞ்சீவி கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதற்கான பூர்வாங்க பணிகள் சிரஞ்சீவி, ராம்சரண் ரசிகர்மன்ற மாவட்ட தலைவர்களின் ஒத்துழைப்புடன் ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் முடிக்கப்பட்டு இன்று முதல் ஆக்சிஜன் வழங்கும் சேவையை தொடங்கப்பட உள்ளது.

இன்று (26.05.2021) காலை முதல் தெலங்கானா மாநிலம் கம்மம், கரீம்நகர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் தொடங்கியுள்ளது. நாளை முதல் அனந்தபூர், குண்டூர், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி ஆகிய இடங்களில் சிலிண்டர்கள் விநியோகம் தொடங்கும் என்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள சிரஞ்சீவி இதன் நோக்கம் ஆக்சிஜன் இல்லாமை, பற்றாக்குறையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் எவரும் பாதிக்கப்படகூடாது, அவர்களை நாம் இழந்து விடகூடாது என்பதே என கூறியுள்ளார்.

ஆக்சிஜன்சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவதில் எந்த தேக்கநிலையும் ஏற்பட்டுவிடாமல் இருக்க அனைத்து மையங்களும் கணினி மூலம் இணைக்கப்பட்டு கண்காணிக்கபடும்.

மேலும், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளை சிரஞ்சீவி அறக்கட்டளை மூலம் வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

புதன் 26 மே 2021