மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

சிம்புவிடம் இத்தனை மாற்றங்களா?

சிம்புவிடம் இத்தனை மாற்றங்களா?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் புதிய வேகம் காட்டி வருகிறார் நடிகர் சிம்பு. தொடர்ச்சியாகத் திரைப்படங்களை கமிட்டாகி வரும் சிம்பு வெர்ஷன் 2.O ஆனது திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

சிம்புவுக்கு இந்த வருடத்தில் ‘மாஸ்டர்’ படத்துடன் போட்டியாக சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும் சிம்புவுக்கு பெரும் பலனை அளித்துள்ளது. ஏனெனில், மீண்டும் சிம்பு தொடர்ச்சியாகப் படங்களில் நடிப்பார். அதுவும், எந்த சிக்கலும் இல்லாமல் நடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை திரையுலகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியது ஈஸ்வரன்.

தற்பொழுது, வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் மாநாடு படம் சிம்புவுக்கு அடுத்து வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து, கன்னட திரைப்படமான ‘முஃப்டி’ ரீமேக்கான ‘பத்து தல’ படத்தில் நடிக்க இருக்கிறார். ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் என படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு, பத்துதல படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படம் உருவாக இருக்கிறது. ஈஸ்வரன் படம் கொடுத்ததற்காக சுசீந்திரனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க இருக்கிறார். அதோடு, மிஷ்கின் இயக்கத்திலும், ராம் இயக்கத்திலும் கதைகளைக் கேட்டு உறுதி செய்து வைத்திருக்கிறார் சிம்பு. இதற்கு நடுவே, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்தது.

இந்த வரிசையில், புதிதாக இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கிறார். சூரி ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய லீட் ரோலில் நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கிவருகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்க ‘வாடிவாசல்’ படம் வெயிட்டிங்கில் இருக்கிறது. இவ்விரு படங்களும் முடிந்த கையோடு, சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி அமையும் என்று சொல்லப்படுகிறது.

சிம்புவின் இந்த 2.O வெர்ஷனில் பல மாற்றங்கள் தெரிவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமர்ஷியல் படங்களுக்கு மட்டும் கவனம் செலுத்தாமல், கொஞ்சம் சீரியஸான நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறாராம் சிம்பு. அதனால் தான் மிஷ்கின், ராம், வெற்றிமாறன் என வெரைட்டியான தேர்வுகளை மனதில் வைத்திருக்கிறார் சிம்பு என்று சொல்லப்படுகிறது.

ஈஸ்வரன் படத்தில் வெற்றிமாறனின் அசுரன் படத்தைச் சீண்டியிருப்பார் சிம்பு. தனுஷை வம்புக்கு இழுப்பதாகவே அந்த வசனம் அமைந்திருந்தாலும், அது வெற்றிமாறன் படமென்பது நினைவுகூரத்தக்கது. அதோடு, தனுஷின் ஆஸ்தான இயக்குநர் வெற்றிமாறன். வெற்றிமாறனை மீண்டும் ஒரு படத்திற்காக தனுஷ் ஏற்கெனவே அழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி சாத்தியமா என்கிற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

- தீரன்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 26 மே 2021