மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

மணி ஹெயிஸ்ட் சீசன் 5 ரிலீஸ் தேதி!

மணி ஹெயிஸ்ட் சீசன் 5  ரிலீஸ் தேதி!

இந்த லாக்டவுன் காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக, ரசிகர்களுக்கும் ஓடிடி தளங்களுக்குமான நெருக்கம் அதிகரித்திருப்பதைக் கூறலாம்.

உலகமெங்கும் திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பு வெப் சீரிஸுக்கும் கிடைத்துவருகிறது. 2.30 மணி நேரப் படங்களைத் தாண்டி, 20, 30, 50 மணி நேரம் ஓடக்கூடிய வெப் சீரிஸ் மீது அலாதியான காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். குறிப்பாக, இந்த லாக்டவுனில் மிகப்பெரிய ஹிட் ஆன வெப் சீரிஸ் மணி ஹெயிஸ்ட்.

ஸ்பெயின் நாட்டுத் தொடரான La casa de papel எனும் வெப் சீரிஸை வாங்கி 2017இல் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. வெளியாகும்போது ஆகாத ஹிட், இந்த லாக்டவுன் சாத்தியமாக்கியது. திருடன் போலீஸ் கதைக்குள் திருடர்களைப் புரட்சியாளர்களாக்கி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது மணி ஹெய்ஸ்ட். இதுவரை, நான்கு சீசன்கள் வெளியாகியிருக்கிறது.

முதலில் ஸ்பானிஷ் மொழியில், ஆங்கில சப் டைட்டிலுடன் ஸ்ட்ரீம் ஆனது. இந்த வெப் சீரிஸுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக, ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டது. உலகமெங்கும் ஆடியன்ஸ் வர, இப்போது தமிழ் உட்பட சில இந்திய மொழிகளிலும் டப் செய்து கடந்த மூன்று மாதமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கதை இதுதான். முதலிரண்டு சீசன்களில் வங்கியில் பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிடுகிறது ஒரு திருட்டுக் குழு. ஆனால், கொஞ்சம் வித்தியாசமாகப் பணமெடுக்கும் வங்கிக்குச் செல்லாமல் பணத்தை அச்சடிக்கும் ஸ்பெயின் ராயல் மின்ட்டில் பணத்தைத் திருட திட்டமிடுகிறது. வங்கிக்குள் செட்டிலாகி பணத்தை அச்சடித்து எடுத்துச் செல்வதே திட்டம். அதை எப்படி நிறைவேற்றினார்கள் என்பதே இரண்டு சீசன்களின் களம்.

மூன்றாவது மற்றும் நான்காவது சீசன்களில் அடுத்த கொள்ளைக்குத் தயாராகிறது டீம். இந்த முறை தங்கத்தைக் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள். மாஸ்டர் மைண்ட் புரொஃபசர் தலைமையில் நடக்கும் இந்தக் கொள்ளையை மையமாகக் கொண்டு பல கதைகளை சுவாரஸ்யமாகப் பேசியிருக்கும் இந்த வெப் சீரிஸ். நான்காவது சீசன் பல ட்விஸ்டுகளுடன் முடிந்திருப்பதால், ஐந்தாவது சீசனுக்காக உலகமெங்கும் ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.

கூடுதல் தகவல் என்னவென்றால், ஐந்தாவது சீசனானது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் செப்டம்பர் 3ஆம் தேதியும், இரண்டாம் பாகம் டிசம்பர் 3ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

புதன் 26 மே 2021