மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

2021 ஆசிய கோப்பை தொடர்: 2023-க்கு ஒத்திவைப்பு!

2021 ஆசிய கோப்பை தொடர்: 2023-க்கு ஒத்திவைப்பு!

கொரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் 2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். உலகக் கோப்பையைக் கருத்தில்கொண்டு அதற்கேற்றபடி டி20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.

இந்த வருடம் டி20 தொடர் நடத்தப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் கடந்த ஆண்டு போதுமான அளவுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் இந்த வருடம் அதிகமான போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளன. மேலும், கொரோனா தொற்றால் அடிக்கடி போட்டி அட்டவணையை மாற்றக்கூடிய நிலையும் ஏற்படுகிறது.

ஆகவே, ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணையைத் தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2021ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

செவ்வாய் 25 மே 2021