மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

பிறந்தநாளில் நடிகர் கார்த்தி கேட்கும் பரிசு!

பிறந்தநாளில் நடிகர் கார்த்தி கேட்கும் பரிசு!

நடிகர் கார்த்தி தனது பிறந்தநாளில் தன்னுடய ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன், பையா,சிறுத்தை, நான் மகான் அல்ல, பிரியாணி, மெட்ராஸ், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்தார். கடைசியாக இவரது நடிப்பில் சுல்தான் படம் வெளியானது. தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது 44வது பிறந்தநாளை நடிகர் கார்த்தி கொண்டாடினார்.

அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி தன்னுடைய ரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் அன்பு பரிசாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோய் குறித்து நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகையில், நடிகர் கார்த்தி தனது பிறந்தநாளில் இந்த வேண்டுகோளை வைத்துள்ளார்.

-வினிதா

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

செவ்வாய் 25 மே 2021