மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

மார்கெட் இல்லாத நடிகைக்கு விஜய் படத்தில் வாய்ப்பு !

மார்கெட் இல்லாத நடிகைக்கு விஜய் படத்தில் வாய்ப்பு !

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய்க்கு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் ‘விஜய் 65’ திரைப்படம் உருவாகிவருகிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்துக்கான முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட மால் செட் உருவாகிவந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு முடங்கியுள்ளது. ஆனால், விஜய் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்தப் படங்களுக்கான இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை முடிவு செய்வதற்கான வேலைகளைப் பார்த்து வருகிறார். அடுத்து யாரை டிக் செய்தால், மார்கெட்டானது அடுத்த லெவலுக்குச் செல்லும் என்பதற்கான முழு ஆய்வுக்குப் பிறகே, முடிவுகளை எடுக்க இருக்கிறார்.

இப்படியான சூழலில், விஜய்யின் அடுத்தப் படத்தை தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான வம்சி இயக்க இருக்கிறார் என்று ஒரு அப்டேட் சொல்லப்பட்டு வருகிறது. அதோடு, இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில், படத்துக்கான கதையை ஸ்கைப் மூலமாக விஜய்க்கு சொல்லியிருக்கிறார் வம்சி. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஐந்து மொழிகளில் PAN இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறதாம்.

இந்தப் படம் பற்றிய கூடுதல் அப்டேட் ஒன்றும் கிடைத்துள்ளது. என்னவென்றால், வம்சி இயக்கும் படத்தில் விஜய்க்கு இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்களாம். பொதுவாக, தெலுங்கு இயக்குநர்களின் படங்களில் இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதெல்லாம் டெம்ப்ளேட்டாக நடக்கும் ஒன்று. அப்படி, விஜய் படத்தில் நடிக்கும் நாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ஏற்கெனவே, பைரவா, சர்க்கார் படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் கீர்த்தி நடித்த படங்களெல்லாம் பெரிதாக வெற்றியைத் தரவில்லை.

பொதுவாக, திரையுலகில் டிரெண்டில் இருக்கும் நாயகிகளே விஜய் படத்தில் நாயகிகளாவார்கள். அப்படித்தான், மாஸ்டரில் மாளவிகா மோகனனும், விஜய் 65 படத்தில் பூஜா ஹெக்டேவும் ஒப்பந்தமானார்கள். கீர்த்தி சுரேஷூக்கு பெரிதாக மார்கெட்டும் இல்லை. அப்படி இருக்கையில், தொடர்ச்சியாக தோல்விப் படங்களைக் கொடுத்த கீர்த்தி சுரேஷ் எப்படி விஜய் படத்தில் ஒப்பந்தமாவார் என்கிற கேள்வியும் எழுகிறது.

அதற்கு கோலிவுட் வட்டாரத்தில் ஒரு காரணமும் சொல்கிறார்கள். ‘மகாநடி’ படத்துக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷ் மீது பெரிய மரியாதையும், வரவேற்பும் இருக்கிறது. அதனால், விஜய் படத்தில் நாயகியாகிறாராம் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் பெரியளவில் வெற்றியடைந்தால் கீர்த்தி சுரேஷ் மீண்டும் டாப் நடிகைகளின் லிஸ்டுக்குள் வந்துவிடுவார்.

- தீரன்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

செவ்வாய் 25 மே 2021