மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

‘PAN இந்தியா’ ரிலீஸூக்குத் தயாராகும் படங்களும், அதன் கதையும் !

‘PAN இந்தியா’ ரிலீஸூக்குத் தயாராகும் படங்களும், அதன் கதையும் !

காலத்துக்கு ஏற்ப தன்னை புதிது புதிதாக வடிவமைத்துக் கொள்ளும் வலிமை கொண்டது சினிமா. எத்தனையோ மாற்றங்களை கண்டிருக்கிறோம். அப்படி, சமீப காலங்களில் ஒரு மொழியில் உருவாகும் படமானது, அந்த மொழியில் மட்டுமின்றி, பிற இந்திய மொழிகளிலும் வெளியாகும் டிரெண்ட் அதிகமாகியிருக்கிறது. படத்தின் பட்ஜெட், நடிகர்களைப் பொறுத்து அதன் ரிலீஸ் வித்தியாசப்படுகிறது. அதற்கு, பாகுபலி, கே.ஜி.எஃப் மாதிரியான படங்களை உதாரணமாகக் கூறலாம். இந்தப் படங்களையெல்லாம் இந்திய அளவில் அதாவது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி பெரிய ஹிட்டானது. அதனால், சமீபத்தில் `PAN இந்தியா` படங்கள் அதிகமாக உருவாகிவருகிறது. அப்படி, என்னென்ன படங்கள் இந்தியளவில் ரிலீஸூக்கு உருவாகி வருகிறது என்பதே இந்தத் தொகுப்பு.

கே.ஜி.எஃப் சேப்டர் 2

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து மாபெரும் ஹிட்டான படம் `கே.ஜி.எஃப்'. இதன், இரண்டாம் பாகத்துக்கு உலகமெங்கும் ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங். முதல் முறையாக ஒரு கன்னடப்படம் எல்லா மொழியிலும் ரிலீஸ் ஆகி, வெளியான மொழிகளில் ஒரு மாஸ் ஹீரோ படத்துக்கு இணையாக ஓடியதென்றால் அது, கே.ஜி.எஃப் தான். இப்படத்தின் ஷூட்டிங்கும் கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தற்பொழுது, அக்டோபர் ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள். கொரோனா இரண்டாம் அலையால் தள்ளிப் போனாலும் போகலாம்.

இரத்தம் ரணம் ரெளத்ரம் (RRR)

இந்த படம், ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர் - ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா சரண் என பல பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கொம்மாரம் பீம், அல்லுரி சீதாராம ராஜூ இந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களுடைய வாழ்க்கையும் பேரலல் லைஃப் மாதிரி ஒன்றாக படம் இருக்கும். நிஜத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. அவர்கள் இருவரும் சந்தித்திருந்தால் எப்படியிருக்கும் என்கிற புனைவே ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஒன்லைன். இந்தப் படத்தை தெலுங்கு மட்டுமின்றி, இந்திய மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தாலும், தற்பொழுது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் படம் தள்ளிப் போக வாய்ப்பு அதிகம்.

அதிபுருஷ்

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், க்ரித்தி சனோன் நடித்துவரும் படம் `அதிபுருஷ்'. ராமாயணக் கதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில், ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலிகானும், சீதையாக க்ரித்தி சனோனும் நடிக்கிறார்கள். 3டி-யில் உருவாகிவருகிறது. ஆக, பிரபாஸூக்கு 3 படங்கள் Pan India ரிலீஸை இலக்காக கொண்டு உருவாகிவருகிறது. இந்தப் படமும் 2022-வை டார்கெட் செய்தே தயார் செய்து வருகிறார்கள்.

ராதே ஷ்யாம்

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்து உருவாகி வரும் படம் `ராதே ஷ்யாம்'. அடிதடி ஆக்ஷன் என இருந்த பிரபாஸ் மீண்டும் ரொமான்ஸ் பக்கம் வந்திருக்கிறார். 1970-களில் யூரோப்பில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது இப்படம். நம்ம ஊர் ஜஸ்டின் பிரபாகரன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். விஜய் 65-ல் பணியாற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தற்பொழுது தள்ளிப் போயிருக்கிறது. அதனால், படக்குழு அறிவித்தபடி ஜூலை 30ஆம் தேதி படம் வெளியாவது சந்தேகமே. ஆனால், பான் இந்தியா ரிலீஸ் உறுதி.

லைகர்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகிவரும் படம் `லைகர்'. வழக்கமாக ரொமான்ஸ் செய்துகொண்டிருந்த விஜய் தேவரகொண்டாவை இந்தப் படத்தில் பாக்ஸிங் செய்ய வைத்து அதிரடி ஆக்ஷன் ஹூரோவாக மாற்றியிருக்கிறார்கள். விஜய்க்கும் சரி, இயக்குநர் பூரிக்கும் சரி... கடந்த சில படங்கள் சரியாக போகவில்லை. அதனால் இந்தப் படத்தை ஹிட்டாக கொடுத்தாக வேண்டுமென்பதால் பரபரப்பாக உழைத்துவருகிறார்கள். தயாராகும் போதே, தெலுங்கு - இந்தி என இரண்டு மொழிகளில் எடுத்து வருகிறார்கள். கூடவே, மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

சலார்

கே.ஜி.எஃப் 2 முடிந்ததும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உருவாகிவரும் படம் `சலார்'. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். செயின் ரியாக்ஷன் மாதிரி, பிரஷாந்துக்கு கே.ஜி.எஃப்2-வும், பிரபாஸுக்கு ராதே ஷ்யாமும் முடிந்தால் தான், இந்தப் படம் துவங்கும். அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படமும் Pan Indian படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை அடுத்த ஆண்டான 2022 ஏப்ரலில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

-தீரன்

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

திங்கள் 24 மே 2021