மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

ராமராக நடிக்கும் பிரபாஸ்

ராமராக நடிக்கும் பிரபாஸ்

சினிமா தொடக்கக் காலங்களில் பக்தியை மையமாகக் கொண்ட திரைக்கதையில் படங்கள் தயாரிக்கப்பட்டது.

1950களுக்குப் பின்னரே சினிமா தயாரிப்பு, திரைக்கதையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் எல்லா காலங்களிலும் இன்றுவரை மகாபாரதமும், ராமாயணமும் திரைக்கதை ஆசிரியர்களுக்கு திரைக்கதை உருவாக்கத்திற்கு அட்சய பாத்திரமாக இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட புராணங்களை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மொழிகளில் ஏராளமான படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருக்கின்றன. சமகால தெலுங்கு நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்துக்குப் பின் அவர் நாயகனாக நடிக்கும் படங்கள் அகில இந்திய அளவில் வியாபாரம் பேசக் கூடியதாக மாறி இருக்கிறது.

தெலுங்கு திரைப்படத் துறையில் எந்தவொரு நடிகருக்கும் இப்படியொரு அங்கீகாரம், வாய்ப்பு இதுவரை கிடைத்தது இல்லை. அதனால் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் படங்களை அதிக முதலீடு செய்து தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம்காட்டுகின்றனர். அந்த வகையில் பிரபாஸ் நடிக்கும் புராணப்படமாக உருவாக இருக்கிறது 'ஆதிபுருஷ்' என்கிற படம். ஓம் ராவத் என்பவர் இயக்கும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது. ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். கதைப்படி அவரை எதிர்க்கும் ராவணனாக பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார். சீதாவாக கீர்த்தி சனான் நடிக்கிறார். இந்தப் படத்தில் லட்சுமணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சன்னி சிங் நடிக்கிறார். இதுபற்றி சன்னி சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “நானும், பிரபாஸும் இந்தப் படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கவும் கைகளின் தசைகளை வலுவாக்கும் முயற்சியில் இருக்கிறோம். ஆனால் அதற்காக செயற்கையான மருந்துகள் எதையும் எடுத்துக்கொள்ளாமல், இயற்கையான முறையிலேயே தான் பயிற்சி செய்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

-இராமானுஜம்

‘மருத’ படம் எப்படி?

4 நிமிட வாசிப்பு

‘மருத’ படம் எப்படி?

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ரிலீஸ் எப்போது?

3 நிமிட வாசிப்பு

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரிலீஸ் எப்போது?

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

திங்கள் 24 மே 2021