9வலிமைக்கு வந்த சோதனை!

entertainment

போனி கபூர் தயாரிப்பில் 2019இல் அறிவிக்கப்பட்ட படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் வலிமையின் மொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும். இதுவரை அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலைக்கூட தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை. 2021 மே 1ஆம் தேதி அஜித்தின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை வெளியாவதாக இருந்தது.

ஆனால், கொரோனா இரண்டாவது அலை தீவிரத்தை முன்வைத்து முதல் பார்வை வெளியீட்டை ஒத்திவைத்தார் போனி கபூர். இதனிடையே, வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதால் அதற்கான மாற்று ஏற்பாடுகளைப் பற்றித் தயாரிப்பு மற்றும் இயக்குநர் தரப்பில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

எடுக்க வேண்டிய காட்சிகள், படத்தின் கதையமைப்புக்கு முக்கியமான காட்சிகள் என்பதால், அதைப் படமாக்காமல் படத்தை இறுதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் 2021 ஆகஸ்ட் 15 அன்று வலிமை படத்தை வெளியிட முடியாது. மேலும் கொரோனா ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும், அதன்பின் படப்பிடிப்புக்கு உடனடியாக அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படுமா என்பதற்கு எவரிடமும் பதில் இல்லை.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் திட்டமிட்ட அடிப்படையில் முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட முடியவில்லை. இதனால் 2021 டிசம்பர் வரை வெளியிட ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அனைத்து படங்களின் ரிலீஸ் தேதியும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வலிமை தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது,

வலிமை படம் தொடங்கியதிலிருந்து அப்படக்குழு திட்டமிட்ட அடிப்படையில் எந்த வேலைகளையும் செய்ய முடியவில்லை. இதுவரை படத்தயாரிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. படம் முடிக்கப்பட்டு வெளியிடும் போது முதலீடு அதற்கான வட்டி அனைத்தும் சேர்ந்து சுமார் 200 கோடி ரூபாய் வரலாம். ஆனால் அதற்குரிய வியாபாரம் இருக்குமா என்பதை தற்போது அனுமானிக்க முடியவில்லை. வலிமை படம் எப்போது தொடங்கினோமோ அன்றிலிருந்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பு, வியாபாரத்தில் தனது வலிமையை” இழந்து வருகிறார் என்கின்றனர்

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *