மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

சினிமாவை ஆவணப்படுத்தும் நாகர்ஜுனா

சினிமாவை ஆவணப்படுத்தும் நாகர்ஜுனா

இந்திய நாட்டின் வரலாறு, அறிவியல், சமூகம், இப்படி எதைப்பற்றி அறிந்து கொள்ள, சமகால சமூகத்திற்கு உதவுவது ஆங்கிலேயர்கள் விட்டு சென்றிருக்கும் ஆவணங்களே. அது உண்மையோ, தவறோ அதன் மூலமாக மட்டுமே நாம் வரலாறுகளை அறிந்து கொள்ளவோ, ஆய்வுசெய்யவோ முடிகிறது.

இந்திய சினிமாவில் அதன் வரலாற்றை, வெளியான படங்களை, அந்த படங்களின் பிரதிகளை ஆவணப்படுத்திப் பாதுகாப்பதில் அரசாங்கமும், திரைப்பட துறையும் பலவீனமாகவே இருந்து வருகிறது. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, அவர் நடித்த படங்களின் பிரதிகளைத் தனிப்பட்ட ரீதியில் ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டபோது, அவர் நடித்த படங்களின் மூலப்பிரதிகள், நெகட்டிவ்கள் சிதிலமடைந்திருந்தது. முதல்வர் என்கிற அதிகாரத்திலிருந்தபோதும் மூலம் இல்லாமல் என்ன செய்வது என்று வருத்தப்பட்டார்.

அதன் காரணமாகவே தமிழ் சினிமா சம்பந்தமான தகவல்கள், புகைப்படங்களைச் சேகரித்து வருவதைப் பிரதான வேலையாகச் செய்து வந்த மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், அவர்களிடம் இருந்த தமிழ் சினிமா சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து நாட்டுடைமையாக்கினார். இன்றளவும் அவை தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இவற்றையெல்லாம் அறிந்த தெலுங்கு திரையுலகில், முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா திரைப்பட அருங்காட்சியகம் தொடங்க திட்டமிட்டு உள்ளார்.

இதுகுறித்து நாகார்ஜுனா கூறும்போது, “திரைப்படங்களை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும். எனவே தெலுங்கு சினிமாவுக்காக ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. 2019-ல் திரைப்பட பயிற்சி கருத்தரங்கு ஒன்றை நடத்தியபோது சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களைப் பார்த்து வியந்தேன். அப்போதே தெலுங்கு திரைப்பட துறையில் உள்ள அம்சங்கள் அனைத்தையும் சேகரித்து அருங்காட்சியகம் அமைக்கும் எண்ணம் தோன்றியது.

இதனைச் செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள திரைப்பட சாதனையாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன். கொரோனா தொற்று எனது திட்டத்தைத் தாமதப்படுத்தி உள்ளது. அருங்காட்சியகத்துக்கான பொருட்களைச் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பழைய நூல்கள், பொருட்களைப் போன்று திரைப்படங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றவர் தெலுங்கு சினிமா பற்றிய வரலாறு அது சம்பந்தமான புகைப்படங்கள், இதுவரை வெளியான தெலுங்கு படங்களின் பிரதிகளை அருங்காட்சியகத்தில் ஒன்றிணைக்கும் முயற்சியில் வெற்றிபெறுவேன்” என்றார்

-இராமானுஜம்

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

2 நிமிட வாசிப்பு

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

ஞாயிறு 23 மே 2021