மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

பொன்னம்பலம் உயிர்காத்த சிரஞ்சீவி

பொன்னம்பலம் உயிர்காத்த சிரஞ்சீவி

தமிழ் சினிமாவில் திரைப்பட சண்டை காட்சிகளில் கூட்டத்தில் ஒருவராக தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கி ஸ்டண்ட் மாஸ்டராக முன்னேற்றம் கண்டவர் பொன்னம்பலம்.

இவரது உயரமும், உடல் மொழியும் நடிகராக காரணமானது. விஜயகாந்த், ரஜினிகாந்த் கமல்ஹாசன் படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தபின் ,முழு நேர நடிகராக மாறினார் நடிகர் பொன்னம்பலம்.

உடல் நல கோளாறு காரணமாக நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடந்த வருடம் சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரபலமான நடிகராக இருந்தபோதிலும் பொருளாதார ரீதியாக வறுமை நிலையில் பொன்னம்பலம் இருந்தது கண்டு திரையுலகம் அதிர்ச்சியடைந்தது.

அப்போது நடிகர் கமல்ஹாசன் பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்கு உதவியதோடு, பொன்னம்பலத்தின் குழந்தைகள் படிப்புச் செலவையும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரகம் அதிக பாதிப்படைந்ததால், அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதற்கு தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த நடிகர் சிரஞ்சீவி உதவியுள்ளார். இதுகுறித்து பொன்னம்பலம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம், ஜெய் ஸ்ரீராம்,ரொம்ப நன்றி அண்ணே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எனக்கு நீங்கள் அளித்த ரூபாய் 2 லட்சம், மிகவும் உதவியாக இருந்தது. இந்த உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன். அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணே" என்று பேசியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக திரையுலக கலைஞர்கள், தொழிலாளர்கள் அடிப்படை தேவைகளுக்கே சிரமப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு எல்லாம் 2019 ஏப்ரல் மாதம் முதல் நடிகர் சிரஞ்சீவி தனிப்பட்ட முறையிலும், கொரோனா நெருக்கடி அறக்கட்டளை என்கிற அமைப்பின் மூலமாகவும் உதவி செய்து வருகிறார்.

இந்த அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் உலகம் முழுவதும் நிதி உதவி பெற்று உதவிகளை மேற்கொண்டு வரும் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கும் உதவி செய்திருக்கிறார்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 22 மே 2021