மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

ஆக்சிஜன் வங்கி தொடங்கும் சிரஞ்சீவி

ஆக்சிஜன் வங்கி தொடங்கும் சிரஞ்சீவி

இந்தியாவில் கொரோனா பரவி வரும் நிலையில், சினிமா நடிகர்கள் தங்கள் வருமானம், வசதிக்கு ஏற்ப உதவிகள் செய்து வருகிறார்கள். சில நடிகர்கள் தொலைநோக்கு பார்வையுடன் கல்வி, மருத்துவம் போன்ற காரியங்களுக்கு உதவி செய்வதுடன், அதனை ஒரு இயக்கமாக மாநிலம் முழுவதும் கொண்டு செல்கின்றனர்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உச்சத்திலிருந்தபோது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் ரத்ததானம் செய்து அதற்கான சான்றிதழுடன் வரவேண்டும் என்பதைச் சிரஞ்சீவி ரசிகர் மன்றம் ஒரு விதியாகவே கடைப்பிடித்து வந்தது. அதோடு அல்லாமல் ரத்த சேமிப்பு வங்கி ஒன்றையும் தொடங்கி இன்றுவரை பராமரித்து வருகின்றார். நடிகர் சிரஞ்சீவி போன்று இந்தியாவில் எந்த ஒரு நடிகரும் பொதுமக்களுக்கு இலவசமாக ரத்தம் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தது இல்லை

கொரோனா தொற்று காரணமாகத் தேசிய அளவில் ஊரடங்கு அமுல்படுத்தபட்ட போதுதான் திரைப்பட தொழிலாளர்கள் சிரமத்தைப் போக்கத் தனது சொந்த பணத்தில் அறக்கட்டளை தொடங்கி அதன் வழியாக வசதி படைத்தவர்கள், திரையுலகினரிடம் நன்கொடை வசூல் செய்து இன்று வரை உதவிகள் செய்வதை இயக்கமாகவே செய்து வருகிறார் நடிகர் சிரஞ்சீவி

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீரியமாகி வருகிறது ஆக்சிஜன் பிரதானமாகத் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து தற்போது தனது மகன் ராம் சரணுடன் இணைந்து ஆக்சிஜன் வங்கி ஒன்றைத் தொடங்குகிறார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கொரோனா தொற்று அதி வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கும் வங்கி ஒன்றைப் போர்க் கால அடிப்படையில் ஒரு வாரத்தில் தொடங்குகிறார் சிரஞ்சீவி. கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை சிரஞ்சீவியின் இந்த ஆக்சிஜன் வங்கியிலிருந்து இலவசமாகப் பொதுமக்கள் நேரடியாகப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

-இராமானுஜம்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

சனி 22 மே 2021