[சினிமா மாதிரியே நடக்குதே: வடிவேலு

entertainment

மனித வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், கஷ்டங்களைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக்கி நடித்த நடிகர் வடிவேலு, கொரோனா காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கு பற்றி நேற்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனாவால் பீதி ஏற்பட்டுள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக் கூடாது. கைகொடுக்க கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும் மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை. என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆள் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது. இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும்.

ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்து இருந்தேன். அதை வெறும் படமாகத்தான் செய்தேன். ஆனால், உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணரவைத்து இருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதைக் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வராமல், தொட்டு பேசாமல் வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *