மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

புயலில் நடனமாடியது ஏன்?: தீபிகா சிங்

புயலில் நடனமாடியது ஏன்?: தீபிகா சிங்

கொரோனா கொடூரத் தாக்கத்தில் இந்தியா தடுமாறி வருகின்ற இந்தச் சூழலில் டவ் தே புயல் வட இந்திய மாநிலங்களை நிலைகுலைய செய்தது. குஜராத்தில் கரையைக் கடந்த டவ் தே புயல் தற்போது வரை 13 உயிர்களைப் பறித்துள்ளது. சூறைக்காற்றால் கிட்டத்தட்ட 16,000 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன, 40,000 மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்ததோடு மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் குஜராத் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுப் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

குஜராத் கடற்கரை பகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான டையூ பகுதிகள், டவ் தே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கொரோனா அச்சம் மிரட்டிக்கொண்டிருக்க, இச்சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான மீட்புப்பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இந்த மழையில் நடிகை தீபிகா சிங் எடுத்த போட்டோவும், அதுதொடர்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

"வாழ்க்கை என்பது துயரங்கள் வந்தால் ஓய்ந்துவிடுவது அல்ல. புயலோ மழையோ எது வந்தாலும் அதையும் சந்தோஷமாக ஏற்று வாழப் பழகிக்கொள்வதே வாழ்க்கை" என்ற வரிகளுடன் மழையில் சாலையில் அவர் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் தீபிகா. இந்தப் பதிவு விரைவில் இணையத்தில் வைரலாகவே அதைத் தொடர்ந்து விமர்சனங்களும் வரத்தொடங்கின.

"பாசிட்டிவிட்டியை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில், 'புயலை ரசிக்கப் பழகுங்கள்' என்றது சரிதான். அதற்கான நேரம் இதுவல்ல மக்களை பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கும் இந்தப் புயலின்போது இப்படி கொண்டாட்டமான மனநிலையோடு புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவது சரியானது அல்ல. கொரோனா மற்றும் புயலால் உயிருக்காக, உணவுக்காகப் பெரும்பான்மையான மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற நிலையில் இப்படிப்பட்ட பதிவுகளை வெளியிடுவது பொறுப்பற்ற செயல்" என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

"அதுவும் பிரபலமாக இருக்கும் ஒருவர் இப்படி புயலால் சாய்ந்த மரத்தின் முன்நின்று படம் எடுப்பதை ஊக்குவிக்கலாமா?" என பதிவை ஆதரித்தவர்களை நோக்கியும் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதில் கூறியுள்ள தீபிகா, "நாங்கள் ஒரு அப்பார்ட்மென்ட்டில் தரை தளத்தில் வசிக்கிறோம். அந்த மரத்தைப் பல வருடங்களுக்கு முன்பு நாங்கள்தான் நட்டோம். துரதிர்ஷ்டவசமாக இந்தப் புயலில் அது வீழ்ந்துவிட்டது. அதுவும் எங்கள் காரின் மீது. எனவே நானும் என் கணவரும் அதை அப்புறப்படுத்துவதற்காக வெளியே வந்தோம். அப்போதுதான் என் கணவர் அந்த மழையில் சில புகைப்படங்கள் எடுக்க விரும்பினார். அவர் அதில் நிபுணரும்கூட. எனவே அப்படித்தான் அந்தப் படங்களை எடுத்தோம். எனவே அந்த மரத்தின் முன் நின்று படம் எடுத்துக்கொண்டது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனமானது அல்ல. யாரையும் அப்படிச் செய்ய நான் ஊக்குவிக்கவும் மாட்டேன். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது" என விளக்கமளித்துள்ளார்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 21 மே 2021