மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

அமெரிக்காவில் திரையரங்குகள் திறப்பு!

அமெரிக்காவில் திரையரங்குகள் திறப்பு!

இந்தியாவில் கொரோனா தீவிரத்தை உணருவதற்கு முன்பாக அதன் கொடூரத் தாக்குதலை எதிர்கொண்டவர்கள் அமெரிக்கர்கள்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு காரணமாக உலக சினிமாவின் தலைமையகமாக விளங்கும் ஹாலிவுட் சினிமா தயாரிப்பு, வெளியீடு, திரையிடல் ஆகியவற்றில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அதன் காரணமாக சர்வதேச சினிமா வியாபாரம் முடங்கியது.

கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் 2020இல் மார்ச் மாதம் முதல் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டன. கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்திய அமெரிக்காவில் சகஜமான வாழ்க்கைக்கு மக்கள் தற்போது திரும்பியுள்ளனர். அதன் காரணமாக ஹாலிவுட் தலைநகரமான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இதை ஒரு விழாவாகக் கொண்டாடிய திரைத்துறையினர், 'மீண்டும் பெரிய திரை' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்சுநேகர், நடிகர் சாம் ரிச்சர்ட், நடிகை மேத்திக்கியூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ரிலீஸுக்குத் தயாரான 'தி ப்ரோடேஜ்' படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. 14 மாதங்களுக்குப் பின் அகன்ற திரையில் சினிமா பார்த்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து 'வேர் போல்ஸ் வித் இன்' திரைப்படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. 'ஹாலர்' திரைப்படத்தின் டிரெய்லரும் திரையிடப்பட்டது.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இன் தி ஹெயிட்ஸ், டிஸ்னி கிரியெல்லா, ஸ்நேக் ஐஸ் உள்ளிட்ட திரைப்பட டிரெய்லர்களும் திரையிடப்பட்டன.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 21 மே 2021