மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

திருமணமா?: கீர்த்தி சுரேஷ் பதில்!

திருமணமா?: கீர்த்தி சுரேஷ் பதில்!

திரைப்பட கதாநாயகிகளுக்கு நிஜத்தில் திருமணம் நடக்கிறதோ இல்லையோ படத்தில் அறிமுகமாகி, வெற்றிகரமான நாயகியாக உச்சத்தை தொடுவதற்குள் ஏகப்பட்ட ரகசிய திருமண செய்திகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஊடகங்களில் எழுதப்படும் திருமண கிசுகிசுக்கள் பல நேரங்களில் உண்மையாகிவிடும். சில நேரங்களில் எவருமே யூகிக்க முடியாத நபரை திருமணம் செய்து தேவயானி போன்று அதிர்ச்சி கொடுக்கும் நடிகைகளும் உண்டு.

அந்த வரிசையில் இளம் நடிகை கீர்த்தி சுரேஷும் தப்பவில்லை, கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி பரபரப்பாவது வழக்கமாகிவிட்டது.

கடந்த ஒரு வருடகாலமாக கொரோனா தாக்கம், ஊரடங்கு காரணமாக புதிய படங்கள் தொடங்கப்படுவது குறைவாக உள்ளது . அப்படி தொடங்கிய படங்களும் படப்பிடிப்பை நடத்த முடியாமல் தடுமாறுகிறது.

கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள அந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் வெளிவரவில்லை. அதனால் அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர் என வதந்தி கிளம்பியது.

தற்போது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது, விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது, என் திருமணம் குறித்த வதந்திகளால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. இந்த வதந்திகள் எல்லாம் எங்கிருந்து தான் கிளம்புகிறது என்று வியக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால் இந்த உலகிற்கு முதலில் அறிவிப்பது நானாகத் தான் இருக்கும்.என் திருமணம் குறித்து தேவையின்றி யூகிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தற்போது நான் என் நடிப்பு தொழிலில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார்.

முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்துக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த கீர்த்தியோ, அனிருத் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே, அவருடன் திருமணம் இல்லை என்றார்.

அதற்கும் முன்பு அரசியல் பிரபலம் ஒருவரின் மகனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பேச்சு கிளம்பியது. கீர்த்திக்கு அடிக்கடி திருமணம் செய்து வைக்கிறார்கள், அவர் நடிப்பில் தான் கவனம் செலுத்துகிறார் என்று பெற்றோர் விளக்கம் அளித்தும் கூட அந்த பேச்சு மட்டும் இன்னும் அடங்கியபாடில்லை.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 21 மே 2021