மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

கமல் படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமானது எப்படி?

கமல் படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமானது எப்படி?

திரையுலக வாழ்க்கையில் பிரச்சினையும் - கமல்ஹாசனும் இணைபிரியாத காதலர்கள், நண்பர்கள், கூட்டாளிகள் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.

நட்சத்திர நடிகராக, வியாபார முக்கியத்துவம் மிக்க நடிகராக, இவருக்கு இணையாக ரஜினிகாந்த் போட்டி நடிகராக வளர்ந்தபின் கமல்ஹாசன் நடித்த அல்லது தயாரித்த படங்களில் பிரச்சினை உருவாகாமலிருந்தது இல்லை.

நடிகர் கமல்ஹாசன் பெரிதும் எதிர்பார்த்த அரசியல் அவரது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. அவரது பிரதான தொழிலான சினிமாவில் வியாபார முக்கியத்துவம் மிக்க நடிகர் என்கிற அந்தஸ்தும் அவருக்கு இப்போது இல்லை. ஏற்கனவே அவர் நாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட சபாஷ் நாயுடு கைவிடப்பட்டது. இந்தியன்-2 இழுபறியில் எப்போது முடியும், எப்போது ரீலீஸ் ஆகும் என்பதை யாராலும் கூற முடியாத இடியாப்ப சிக்கலில் உள்ளது.

கமல்ஹாசன் தன்னை நடிகராக , வியாபாரம் ஆகக்கூடிய படத்தின் நாயகனாகத் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வேறு ஒரு வணிக நோக்கத்துடன் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனே நாயகனாக நடிக்க வேண்டியதாகிவிட்டது.

ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணி தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தைத் தயாரிக்கும் கூட்டணியாக மாறியுள்ளது. திட்டமிட்ட அடிப்படையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாததால் அந்தப்படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் விலகிவிட்டார். இதையடுத்து சர்கார் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சத்யன்.ஆக்க்ஷன் த்ரில்லராக உருவாகும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ்.

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கப் பலரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால் கமல் விரும்பிய வில்லன் நடிகர் விஜய்சேதுபதி. கமல்ஹாசன் படம் என்றால் அவருடன் நடிப்பதே பெருமை என சம்பள விஷயத்தில் கறார் காட்ட மாட்டார்கள் நடிகர்கள் என்கிற நம்பிக்கையில் விஜய் சேதுபதிக்குக் குறைவான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

விஜய் சேதுபதி தரப்பில் தேதி ஒத்துவரவில்லை என கூறி தட்டிக்கழிக்கப்பட்டது. விக்ரம் படத்தை கமல்ஹாசன் என்கிற ஒற்றை பெயரை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்பது சிறந்த திரைப்பட வியாபாரியான நடிகர் கமல்ஹாசனுக்குத் தெரியும். அதனால்தான் வியாபாரத்திற்கு உரிய கச்சா பொருளாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி கேட்ட சம்பளத்திற்கு அவரை வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது விக்ரம் தயாரிப்பு தரப்பு என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

விக்ரம் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இருக்கிறார். அவருக்கு என்ன கதாபாத்திரம் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. கதாநாயகி யார் என்பது தான் இதுவரை முடிவாகவில்லை. இன்றைக்கு இருக்கும் கதாநாயக நடிகைகள் கமலுடன் ஜோடி சேர ஆர்வம் காட்டவில்லை என்பதும் ஒரு காரணம். அதனால் கமல்ஹாசனுடன் இதுவரை நடிக்காத புதுமுகம் அல்லது வேற்றுமொழி நடிகை ஒருவரை தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்போகிறார் லோகேஷ் கனகராஜ் என்கின்றது ராஜ்கமல் வட்டாரம்.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

புதன் 19 மே 2021