மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

கொரோனா வறுமை: விருதுகளை விற்ற நடிகை!

கொரோனா வறுமை: விருதுகளை விற்ற நடிகை!

கொரோனாவால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாமல் வருமானமின்றி கஷ்டப்படும் பழம்பெரும் நடிகை, தனக்குக் கிடைத்த விருதுகளை விற்றுள்ளார்.

பழம்பெரும் தெலுங்கு நடிகை பாவலா சியாமளா. இவர் 1984இல் ‘சேலஞ்ச் படத்தில் அறிமுகமாகி சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்த்ரா, கட்கம் கவுரி, பிளேடு பாப்சி, ரெயின்பொப். குண்டூர் டாக்கீஸ் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் 2019இல் ‘மதுவடலரா’ படம் வந்தது. அதன் பிறகு கொரோனாவால் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாகக் கூறிவந்தார்.

சியாமளாவின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது கஷ்ட நிலையை அறிந்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.1 லட்சம் உதவி வழங்கினார். இந்த நிலையில் வறுமை காரணமாக சியாமளா தனக்குத் திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்ட விருதுகளை விற்று இருக்கிறார்.

இதுகுறித்து அவர், “எனக்கு காசநோய் உள்ளது. எனது மகளும் உடல்நலம் குன்றி இருக்கிறார். மருத்துவச் செலவுகளுக்கு மாதம் ரூ.10,000 ஆகிறது. கொரோனா காலத்தில் யாரும் எனக்கு உதவவில்லை. எனவே, எனது அத்தியாவசிய செலவுகளுக்காக எனக்கு வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தையும் விற்றுவிட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

-ராஜ்

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

புதன் 19 மே 2021