மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

’நீங்கள் நடிகர் இல்லை, மாயவித்தைக்காரர்’: இந்தி பட இயக்குநர்!

’நீங்கள் நடிகர் இல்லை, மாயவித்தைக்காரர்’:  இந்தி பட இயக்குநர்!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் கர்ணன்.

ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான இந்தப் படம், தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை உருவாக்கியது. சில வார திரையரங்க ஓட்டத்துக்குப் பின் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரப் பரவலால் திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் மே 14ஆம் தேதி அன்று கர்ணன் படம் வெளியானது. திரையரங்க வெளியீட்டில்

கொரோனா பயத்தில் சென்று பார்க்காதவர்கள், தற்போது குடும்பத்துடன் படத்தைப் பார்த்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகம் செய்த இயக்குநர் ஆனந்த் எல்.ராய், தற்போது கர்ணன் படத்தையும், அதன் இயக்குனர் மாரிசெல்வராஜ்,,நடிகர் தனுஷ் ஆகிய இருவரையும் வானளாவ புகழ்ந்து உள்ளார்

”அற்புதம், அட்டகாசம். கர்ணன் என்கிற அனுபவத்தை இப்படித்தான் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்னே! ஒரு கதைசொல்லி நீங்கள். உங்கள் எண்ணங்களை திரையில் நீங்கள் தீட்டிய விதத்துக்கு உங்களை வணங்குகிறேன். தனுஷ், நீங்கள் ஒரு மாயவித்தைக்காரர். அதை நீங்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் உங்களை நடிகர் என்று நினைத்தேன் “என்று ஆனந்த் எல்.ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது தனுஷ், அக்‌ஷய் குமார் நடிக்கும் 'அத்ரங்கி ரே' திரைப்படத்தையும் ஆனந்த் எல்.ராய் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 19 மே 2021