மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

ஷங்கரிடம் ராம் சரண் கேட்கும் உத்தரவாதம்!

ஷங்கரிடம்  ராம் சரண் கேட்கும் உத்தரவாதம்!

தேர்தல் முடிவைப் போலவே இந்தியன் 2 படமும் கமல்ஹாசனுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கமல் நடிக்கும் 'இந்தியன் - 2' திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, படத் தயாரிப்பு நிறுவனம் லைகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில், இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல உண்மைத் தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார் இயக்குநர் ஷங்கர்.

மேலும் முதலில் இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்க முன்வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்ததாகவும் கூறினார்.

மேலும் படத் தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகக் கூறியும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் ஷங்கர் கூறியிருந்தார்.

ஜூன் 4-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் தில் ராஜு தயாரிப்பில் ராம் சரண், தேஜா நாயகனாக நடிக்கும் பன்மொழித் திரைப்படத்தின் வேலைகள் குறித்தும், இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் 'அந்நியன்' திரைப்படத்தின் ரீமேக் வேலைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஜூன் மாதம் ராம் சரண் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தியன் 2' சர்ச்சையாலும், கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு போன்றவற்றால்... படப்பிடிப்புக்கு அனுமதி எப்போது வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இதுவரை இல்லை. அதனால் படப்பிடிப்பு சம்பந்தமாக எந்தவொரு முடிவையும் ராம் சரண் தரப்பில் எடுக்க முடியவில்லை.

எனவே இது சம்பந்தமாக பேசி முடிவெடுக்க அமெரிக்காவில் இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜுவை ராம் சரண் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின் இயக்குனர் ஷங்கரிடம் பேசிய ராம் சரண், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி படத்தை முடித்து கொடுத்த பின்னரே அடுத்த படத்துக்குச் செல்ல வேண்டுமென்று உத்தரவாதம் கோரியதாகவும் தெரிகிறது.

இதற்கு ஷங்கர் தற்போது சம்மதம் தெரிவித்திருந்தாலும் ஜூன் 4 விசாரணையில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின்னரே எந்தப் படத்தின் படப்பிடிப்பை முதலில் தொடங்குவது என்பது குறித்த தெளிவு கிடைக்கும். இதற்கிடையில் இந்தி, தெலுங்கு, மலையாளம், மொழிகளில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்ககூடிய தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு லைகா தரப்பில் இருந்து வேண்டுகோள் கடிதம் ஒன்று அனுப்பபட்டிருக்கிறது. அதில், “ இந்தியன் - 2 படப்பிடிப்பு முடிக்காமல் வேறு மொழிகளில் ஷங்கர் படம் இயக்க தடை விதிக்க வேண்டும்” என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியெல்லாம் நீதிமன்றப் படியேறிக்கொண்டிருந்தால் கதை டிஸ்கஷனை விட வழக்கு குறித்த டிஸ்கஷன் தானே அதிகமாக நடத்த வேண்டியிருக்கும்?

-இராமானுஜம்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

செவ்வாய் 18 மே 2021