மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

கர்ணன் படத்தில் டப்பிங் பேசாதது ஏன்? -ரகசியம் உடைத்த லால்

கர்ணன் படத்தில் டப்பிங்  பேசாதது ஏன்? -ரகசியம் உடைத்த லால்

மலையாள நடிகர் லால் தமிழ் படங்களில் நடிக்கும்போது அவரே டப்பிங் பேசுவது வழக்கம். படத்தில் தனது கதாபாத்திரம் அழுத்தமாகவும், தனித்து தெரியவேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்.

அசுரன், பரியேறும் பெருமாள் படங்களுக்குப் பின், கர்ணன் படம் வெளியாக இருந்ததால் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்தப் படத்துக்கு முன்பு வெளியான சுல்தான் படத்திலும் லால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்கு தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருந்தார்.

இதேபோல கர்ணன் படத்திலும் முக்கியமான ஏமராஜா பாத்திரத்தில் லால் நடித்ததால் அவரே டப்பிங் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கர்ணன் படத்தில் லால் நடித்த கதாபாத்திரத்திற்கு கடைசி வரையிலும் டப்பிங் பேச மறுத்து வந்துள்ளார். வேறு வழியின்றி திருநெல்வேலியை சேர்ந்த ஒருவரை டப்பிங் பேச வைத்துள்ளார் இயக்குனர் மாரிசெல்வராஜ். கர்ணன் படத்தில் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தாதது குறித்து படக் குழுவுக்குள் மட்டுமல்ல, அதைத் தாண்டியும் பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் அந்த விவகாரத்துக்கு நடிகர் லால் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

“கர்ணன் படத்தில் ஏமராஜா பாத்திரத்துக்கு ஏன் சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை என்று பலரும் என்னிடம் கேட்டு வருகிறீர்கள். கர்ணன் படம் திருநெல்வேலி பின்னணியைக் கொண்ட திரைப்படம் என்பதை நீங்கள் அறிவீர்கள். திருநெல்வேலியின் தமிழ் என்பது சென்னையில் பேசப்படும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. மலையாளத்தில் கூட திருச்சூர் வட்டார மொழியை ஒருவர் பேச முயன்றால் அதன் அருகில் கூட நெருங்க முடியாது.

கர்ணன் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியவத்துவம் உள்ள ஒரு திரைப்படம். மேலும் தனித்துவமான அந்த வட்டார மொழியைப் பேசுவதன் மூலமே அந்தக் கதாபாத்திரம் முழுமை பெறும். அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் உள்ளூர்க்காரர்கள். எனவே என்னுடைய மொழி மட்டும் படத்தில் தனியாகத் தெரிவதற்கு வாய்ப்பு இருந்தது. படத்தில் என்னுடைய பங்களிப்பு 100% இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோரது கட்டாயத்தின் பேரில் டப்பிங் பணிகளுக்காக சென்னை சென்றேன். எனினும் படத்தின் நலனுக்காக என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரது குரல் பயன்படுத்தப்பட்டது. உங்கள் அனைவரது ஆதரவுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார் லால்.

லால் அல்லால் வேறு யார் இப்படி ஒரு விளக்கம் அளிக்க முடியும்? தனிப்பட்ட தனக்கான விஷயமாக கருதாமல் ஒட்டுமொத்த படத்தின் முன்னேற்றத்தை முன்னிட்டே லால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 18 மே 2021