மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

’என்னையும் கைது செய்யுங்கள்’: நடிகை ஒவியா

’என்னையும் கைது செய்யுங்கள்’: நடிகை ஒவியா

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஒவியா ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “ மோடி ஜி எங்கள் குழந்தைகளுக்கு தேவையான தடுப்பூசிகளை ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்” என்று எழுதப்பட்ட போஸ்டர்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக 17 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கூலிக்காக போஸ்டர் ஒட்டியவர்கள் என்பது தெரிய வந்ததையடுத்து, இந்த விவகாரத்துக்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த கைது சம்பவத்தை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் #ArrestMeToo என்ற ஹேஷ்டேக் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

இந்நிலையில், நடிகை ஒவியா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ இது ஜனநாயகம்தானா?” என்று கேள்வி எழுப்பி, ”தன்னையும் கைது செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இவருடைய பதிவுக்கு சில எதிர்ப்புகள் வந்தாலும், பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து ஹார்டின் விட்டு வருகின்றனர். ஒரு தென்னிந்திய நடிகை இப்படி தைரியமாக பேசுவதை முதல்முறையாக பார்க்கிறோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

-வினிதா

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

திங்கள் 17 மே 2021