மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

மீண்டு(ம்) வாழ வருகிறேன்: இயக்குநர் வசந்தபாலன்

கொரோனா தொற்று பரவாத இடமேயில்லை என்று சொல்லுமளவுக்கு சினிமா பிரபலங்கள் பலருக்கும் பரவியுள்ளது. சிலர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும், சிலர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டும் வருகிறார்கள். இயக்குநர் வசந்தபாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா சிகிச்சை அனுபவத்தைக் கடந்த சில நாட்களாக முகப்புத்தகத்தில் பதிவு செய்து வருகிறார், அப்படி அவர் செய்த பதிவு ஒன்று அவர் நட்பு வட்டம் கடந்து பொதுவெளியில் கொரோனாவின் கோரமுகத்தைப் புரியவைத்துக் கலங்கடித்திருக்கிறது.

"கடந்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு நோய் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மிக கடினமான காலகட்டம் மருத்துவர்களின் கணிப்பைத் தாண்டி என் நோய் தீவிரம் அடைந்தது. இடையறாது நாலா பக்கமும் கிடைத்த மருத்துவ ஆலோசனைகளால் நண்பர்களின் முயற்சியால் பெரும் மருத்துவர்களின் கண்காணிப்பால் செவிலியர்களின் கூர்மையான அக்கறையால் மருத்துவ உதவியாளர்களின் தன்னலமற்ற பணியால் பெருந்தொற்றை அங்குலம் அங்குலமாகக் கடந்தேன்.

இலக்கியமும் வாசிப்பும் மனச்சோர்வின்றி என்னை இலவம் பஞ்சைப் போல மிதக்க வைத்தது. இருபது நாட்கள் கடந்துவிட்டதால் கொரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன். அடுத்த வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும், என் குருநாதர்களும், சக இயக்குநர்களும், திரையுலக நண்பர்களும், முகமறியா முகப்புத்தக நண்பர்களும் இடையறாது என் மீது பொழிந்த பேரன்பில் மெல்ல மெல்ல வாதையின் பெருங்கொடுக்கிலிருந்து விடுபட்ட வண்ணம் இருக்கிறேன். அன்பு சூழ் உலகில் வாழ்வது வரம், மீண்டு(ம்) வாழ வருகிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

-இராமானுஜம்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

திங்கள் 17 மே 2021