மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஓடிடியில் ‘இனம்’ !

ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஓடிடியில் ‘இனம்’ !

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பி ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்ட இனம் திரைப்படம் ஏழு ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது.

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியானது 'இனம்' திரைப்படம். சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓடிடியில் வெளியாக உள்ளது 'இனம்'

தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், திரையிடல் இவை மூன்றும் கடந்த மார்ச் முதல் இன்றுவரை அபாய கட்டத்திலேயே இருக்கிறது. எப்போது சினிமா தொழில் இயல்புநிலைக்கு வரும் என்பதை எவராலும் அறுதியிட்டு கூற முடியாத நிலைதான்.

இனம், மொழி, சாதி கட்டமைப்புகளில் ஊறிப்போன தமிழகத்தில் இனம், மொழி, சாதியைக் குறை சொல்லி அல்லது விமர்சித்து படம் தயாரித்து எளிதாக இங்கு வெளியிட்டுவிட முடியாது.

இன்றைய சூழலில் இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய அமைப்பாக ஓடிடி தளங்கள் உள்ளன. இவற்றில் வெளியாகும் படங்களுக்குத் தற்போதைக்கு கட்டுப்பாடு இல்லை என்ற காரணத்தால் இயக்குநர்கள் தாங்கள் நினைத்ததைத் திரையில் காட்ட முடிகிறது என்ற மனோநிலையில் படம் எடுத்துவருகின்றனர்

அதனாலேயே ஓடிடி தளங்களில் வெளியாகும் அனைத்துப் படைப்புகளுக்கும் தணிக்கை தேவை என்ற குரல் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் ஏழு வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பிய திரைப்படம் ஒன்று தற்போது மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரைக் கதைக்களமாகக் கொண்டு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் 'இனம்'.

உகந்தா, கரண், சரிதா, கருணா. அனக்கி, ஷியாம் சுந்தர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் திரையிடப்பட்டது இனம் திரைப்படம்.

படம் திரையங்கில் வெளியாவதற்கு முன்னரே ஈழத்தமிழர் ஆதரவு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத்தினர் படத்தை வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக உறுதியளித்த படக்குழு, ஒருசில காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டது.

சர்ச்சைகளுக்கு இடையில் திரையரங்குகளில் இனம் வெளியானாலும் பார்வையாளர்கள் வராததால் தொடக்க காட்சியே பல ஊர்களில் ரத்தானது. சில ஊர்களில் முதல் நாளே படம் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.

இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமை பெற்றிருந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், அதன் பங்குதாரருமான இயக்குநர் லிங்குசாமி, படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே படத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதன்படி மார்ச் 31ஆம் தேதி முதல் தமிழக திரையரங்குகள் அனைத்திலும் இருந்தும் 'இனம்' திரைப்படம் நிறுத்தப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது 'இனம்' திரைப்படம். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய பதிவில், 'இனம்' படத்தை பார்க்க விரும்பும் நண்பர்களுக்காக, விரைவில் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளது. தொழில்ரீதியாக தயாரிப்பாளர் - திரையரங்கு உரிமையாளர்கள் - ஓடிடி என இருந்த பஞ்சாயத்து ஓரளவு சரி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒடிடியில் இனம் படத்தை ஒளிபரப்புவதன் மூலம் தமிழக மக்கள், அரசியல் கட்சிகளுடன் மோத தயாராகி வருகிறதா என்கிற குரல்கள் எழும்ப தொடங்கி உள்ளது.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

ஞாயிறு 16 மே 2021