மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

கொரோனா நிதி: ஆர்வம் காட்டும் திரையுலகம்!

கொரோனா நிதி: ஆர்வம் காட்டும் திரையுலகம்!

கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத நிதி நெருக்கடியைச் சமாளிக்க தாராள நிதி வழங்குமாறு தமிழக மக்கள், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் கோரிக்கையை ஏற்று வெளிநாடுவாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண கடைநிலை ஊழியர்கள் வரை நிதியுதவி வழங்கி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார், நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோர் நிதி உதவி அளித்த நிலையில், தற்போது இயக்குநர் ஷங்கர், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

வெற்றிமாறன், ஷங்கர், ஜெயம் ரவி என மூவரும் தலா ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதுதவிர, ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இவர் திமுகவில் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

ஞாயிறு 16 மே 2021