மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

சிவகார்த்திகேயன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

சிவகார்த்திகேயன் படத்திற்கு யு/ஏ  சான்றிதழ்!

ரஜினிகாந்த், விஜய் நடித்த படங்களை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று இருந்ததில் கடைசியாக இணைந்தது சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்.

அவரது படத்திற்கு குழந்தை முதல் முதியவர் வரை ரசிகர்கள் கூட்டம் தமிழகத்தில் உண்டு. ஆபாசம், விரசம் இவை இரண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் இருக்காது என மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் டாக்டர் படம் தியேட்டரிலா, ஓடிடியிலா என்கிற செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன. கொரானா வில் இருந்து எல்லோரும் தப்பித்து வர வேண்டும் அதுவரை டாக்டர் பட வெளியீட்டை பற்றிப் பேசவிரும்பவில்லை என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி

வைத்தார், டாக்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ஜே.ஆர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்திற்குத் தணிக்கை குழுவினரிடம் இருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமே தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டு விட்டாலும், தற்போது தான் சான்றிதழ் குறித்த விபரம் வெளியில் வந்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுநாள் வரை நடித்த படங்களில் முதன்முறையாக யு/ஏ சான்றிதழ் பெறுவது இந்தப்படம்தான்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்தும், எப்போதுமே குழந்தைகளைக் கவரும் விதமாகவே உருவாக்கப்பட்டு வருவதால் இதுநாள் வரை அவரது படங்களுக்கு யு சான்றிதழ் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் டாக்டர் படத்தில் உச்சபட்ச சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

-இராமானுஜம்

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

சனி 15 மே 2021