மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

ஆன்டி இண்டியன்: முதல் பார்வை!

ஆன்டி இண்டியன்: முதல் பார்வை!

சினிமா விமர்சனங்கள் யூடியூப் சேனல்களில் பிரபலமாகாத காலத்தில் படங்கள் பற்றிய விமர்சனங்களைப் பேசத் தொடங்கியவர் மாறன். குறிப்பிட்ட ஒரு கலர் சட்டையை இவர் பயன்படுத்தியதால் புளூ சட்டை மாறன் என திரைப்படத் துறையினரால் அழைக்கப்பட்டார்.

தமிழ் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலில் இவரால் விமர்சிக்கப்பட்ட படங்கள் பாராட்டுக்குரியதாக எப்போதும் இருந்தது இல்லை. இதனால் திரைப்பட துறையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மத்தியில் அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், நானும் ஒரு படம் எடுக்கப் போகிறேன் என்று களமிறங்கினார் மாறன்.

அதையடுத்து ஊரில் வெளியாகும் படங்களையெல்லாம் கடுமையாக விமர்சிக்கும் இவர் திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கும் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போமே என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரது யூடியூப் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

இப்படியான நிலையில் பலவிதமான எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கியுள்ளார் மாறன். இதில் பல யூடியூப் பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆனால் இந்த படத்தை அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து எடுத்திருப்பதாக சொல்லி சென்னை தணிக்கை அலுவலகத்தில் தணிக்கை செய்வதற்கு மறுத்து விட்டனர்.

இதன் காரணமாகத் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் மாறன். ஏற்கனவே படத்திற்கான முதல் பார்வை ரம்ஜான் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தான் விமர்சனம் செய்யும் படங்களை எதிர்மறையான கண்ணோட்டத்துடன் பார்ப்பது மாறனின் அடிப்படை கொள்கை. அதே போன்றே நேற்று (மே 14) வெளியிடப்பட்ட ஆன்டி இண்டியன் படத்தின் மோஷன் போஸ்டரும் அவ்வாறே வெளியிடப்பட்டுள்ளது.

அதில் புளூ சட்டை மாறனுக்குக் கண்ணீர் அஞ்சலி ஒட்டப்பட்டிருப்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பார்த்து, படமே இன்னும் வெளியே வரல, அதற்குள்ளேயே கண்ணீர் அஞ்சலி போஸ்டரா? என்று அந்த போஸ்டருக்கு பலரும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஆன்டி இண்டியன் திரைக்கு வருமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம் மண்டல தணிக்கை குழு நிராகரித்த படங்கள் மறுதணிக்கை, டிரிப்யூனலில் விண்ணப்பித்து தணிக்கை சான்றிதழ் பெறலாம்.

இவை இரண்டையும் மத்திய அரசு கலைத்துவிட்டது மண்டல தணிக்கை அதிகாரியால் நிராகரிக்கப்பட்ட படங்கள் நீதிமன்றங்கள் மூலம் மட்டுமே நிவாரண வழிகளைத் தேட முடியும் அந்த சட்ட போராட்டங்களைக் கடந்து, எப்போது ஆன்டி இண்டியன் வருவது என்கிற கவலை புளூ சட்டை மாறனின் ஆதரவாளர், எதிர்ப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

-இராமானுஜம்

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

சனி 15 மே 2021