மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 மே 2021

சூரரைப் போற்று படத்திற்குக் கிடைத்த கௌரவம்!

சூரரைப் போற்று படத்திற்குக் கிடைத்த கௌரவம்!

டெக்கான் ஏர்லைன்ஸ் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் சூரரைப் போற்று.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், பரேஷ் ராவல் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி, அதிகப்படியான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.

படம் பார்த்த பார்வையாளர்கள், விமர்சகர்களிடமும் பாராட்டுதலைப் பெற்ற இப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாகவும் அமைந்தது.

இந்நிலையில் டாப் 1000 படங்களுக்கான ஐஎம்டிபி தர வரிசையில் இப்படம் 9.1 ரேட்டிங் பெற்று சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

1994ல் வெளியான தி சாஷெங் ரிடெம்ப்சன், 1972ல் வெளியான தி காட் பாதர் ஆகிய படங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. முன்னதாக இந்த படம் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது.

ஆனாலும் விருதுக்குத் தேர்வாகவில்லை. தொடர்ந்து பல்வேறு சர்வதேச பட விழாக்களிலும் பங்கேற்று உள்ளது. இந்த நிலையில் சூரரை போற்று படம், தற்போது சீனாவில் நடைபெறும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் செல்கிறது.

ஷாங்காய் திரைப்பட விழா ஜூன் 11-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் சூரரை போற்று திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

சனி 15 மே 2021