மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

நிறவெறிக்கு எதிராக டாம் குரூஸ்

நிறவெறிக்கு எதிராக டாம் குரூஸ்

பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ், தான் வாங்கிய கோல்டன் குளோப் விருதுகளை அந்த அமைப்பிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

கோல்டன் குளோப் விருதுகளை வழங்கும் அமைப்பான ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அஸோசியேஷன் என்கிற அமைப்பின் மீது, நிற வெறி குற்றச்சாட்டு எழுந்த நிலையில் டாம் குரூஸ் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்

ஹாலிவுட் மற்றும் டிவிக்களில் சிறந்த கலைஞர்களுக்கு வருடந்தோறும் கோல்டன் குளோப் என்ற விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டு வருகிறது. 1944ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வரும் இவ்விருதுகள், ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படுகிறது.

2009ஆம் ஆண்டில் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ‘கோல்டன் குளோப்’ விருதை பெற்றார்.

இந்த விருதினை வழங்கும் ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அஸோசியேஷன் அமைப்பில் ஹாலிவுட்டின் பத்திரிகை மற்றும் புகைப்படக் கலைஞர்கள் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக இந்த அமைப்பில் கறுப்பினத்தைச் சேர்ந்த எவரையும் உறுப்பினராக்க அமைப்பு நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை என அமைப்பின் உறுப்பினர்களே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஹாலிவுட் கலைஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ் இந்தப் பிரச்சினையில் கருப்பின மக்களுக்கு ஆதரவாக தான் இருக்கப்போவதாகச் சொல்லி தான் பெற்றிருந்த மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் அந்த அமைப்பிடமே திருப்பி அளித்துள்ளார்.

இதேபோல் உறுப்பினர் குழுவில் உரிய மாற்றங்களைச் செய்யாவிட்டால் 2022ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவை ஒளிபரப்பு செய்யப்போவதில்லை என என்.பி.சி. தொலைக்காட்சி நிறுவனமும் அறிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினை பூதாகரமாக ஆனதையடுத்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து வகையான இனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் குழுவில் சேர்க்கப்படுவார்கள் என இந்த விருது அமைப்பு தெரிவித்துள்ளது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 14 மே 2021