வட சென்னை மக்களின் வாழ்வியல் படத்துக்கு சர்வதேச விருது!

entertainment

லோகேஷ் குமார் My Son Is Gay” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே, பலரது கவனத்தை ஈர்த்த இவர் தனது இரண்டாவது படமாக ‘N4’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

வட சென்னை மக்களின் வாழ்வியலை எதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அஃப்சல் ஹமீது, வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா என்று பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் பலரின் கவனத்தை ஈர்த்தது.சமீபத்தில் இப்படம் ‘Calcutta International Cult Film Festival’ என்னும் திரைப்பட விழாவில் பங்கேற்றது.

இந்த விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது, இந்தப் படத்தின் இயக்குநரான லோகேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் ‘N4’ திரைப்படம் 2021-ல் நடந்த 11-வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *