மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

அஜித் வழங்கியது ரூ.25 லட்சமா? ரூ.2.5 கோடியா?

அஜித் வழங்கியது  ரூ.25 லட்சமா? ரூ.2.5 கோடியா?

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவிட் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பேரிடர் காலத்தில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட் உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

மேலும், மேற்கூறிய நடவடிக்கைகளுக்காகப் பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகப் பொதுவெளியில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பொது மக்களும், பிரபலங்களும், சிறுவர்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி வருகின்றனர்.

நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

நேற்று ( மே 13) இயக்குநர் முருகதாஸ், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இருவரும் தலா 25 லட்ச ரூபாய் நிதி வழங்கினர் இன்று காலை நடிகர் அஜித்குமார் 25 லட்ச ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

முதலில் 2.5 கோடி ரூபாய் அஜித் வழங்கியதாக அறிவிப்பு வெளியான நிலையில், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, வங்கி பரிவர்த்தனை மூலம் அஜித் ரூ.25 லட்சம் தான் வழங்கியதாகத் தெரிவித்தார். இதனால் அஜித் வழங்கிய நிதி தொடர்பாகக் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, அரசு சார்பிலும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவர் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் இன்று வழங்கினார்.

ஏற்கனவே தமிழ்ப் பட இயக்குநர் அமுதவன் முதல்வர் நிவாரண நிதிக்கு ஐம்பது ஆயிரம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

2 நிமிட வாசிப்பு

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

வெள்ளி 14 மே 2021