மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 மே 2021

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

நிதி நெருக்கடி: புலம்பும் ஸ்ருதி

நடிகை ஸ்ருதிஹாசன் தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகரான கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்பாவுடன் இல்லாமல் தனியாக பிளாட் வீடு ஒன்றை வாங்கி அதில் தனித்து வாழ்கிறார். இந்தப் புதிய வீட்டிற்கு மாதத் தவணை கட்டுவதற்காகத் தான் இன்னும் உழைக்க வேண்டியிருக்கிறது என்று ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.

இது பற்றி ஸ்ருதிஹாசன் பேசும்போது, இந்தக் கொரோனா காலத்தில் படப்பிடிப்புகளை நடத்துவது சிக்கலாக உள்ளது. கொரோனா தொற்று முடியும் வரையிலும் காத்திருக்கவும் முடியாது. முகக்கவசம் அணியாமல் படப்பிடிப்பு அரங்கத்தில் இருப்பதும் இயலாத காரியம்.

மற்றவர்கள்போல் எனக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக நான் சுயமாகத்தான் சம்பாதித்து வருகிறேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். எனது அம்மாவிடமோ,அப்பாவிடமோ நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எனது செலவுகளையும் நானே தான் கவனித்துக்கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். சுயமாகச் செயல்படுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்தக் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலுக்கு முன்பாக நான் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளேன். அதற்கு மாதத் தவணையைக் கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அளவுகோலில் கடன்கள் உள்ளன. நானும் அப்படித்தான். இதற்காகவே நான் திரும்பவும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

இந்தக் கொரோனா காலகட்டத்தில் கார், வீடெல்லாம் வாங்காமல் தப்பித்தவர்களைப் பாராட்டுகிறேன். நான் வாங்கிய உடனேயே இந்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் கடவுளைத்தான் திட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

-இராமானுஜம்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

5 நிமிட வாசிப்பு

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

வெள்ளி 14 மே 2021