மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

சிவகுமார் - அனுஷ்கா கூறும் தற்காப்பு நடவடிக்கை!

சிவகுமார் - அனுஷ்கா கூறும்  தற்காப்பு நடவடிக்கை!

கொரோனா தொற்றின் மீது. மக்களுக்கு இருக்கும் பயத்தைக் காட்டிலும் அது பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருவது மக்களின் மனநிலையைப் பாதிக்கிறது என சமூக பொதுவெளியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இவற்றிலிருந்து நேர்மறையான, மனநிலை, சிந்தனைகளுக்கு மக்களை மாற்ற வேண்டும் என்கிறார் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா.

கொரோனா பயத்தைப் போக்கும் விதமாக சில வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா மீதுள்ள பயத்தை போக்கி தைரியப்படுத்துவது அவசியம். இங்கு 10 பேர் செத்தனர். அங்கு 50 பேர் செத்தனர் என்றெல்லாம் பயமுறுத்தி, இருக்கிற தைரியத்தை போக்குவதை விடுத்து கொரோனாவை எதிர்கொள்ள நாம் எப்படி இருக்க வேண்டும்.

நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும். இந்த கஷ்ட காலத்தில் எல்லோரும் நலமுடன் இருக்க நான் பிரார்த்திக்கிறேன். கஷ்டத்தில் இருந்து மீள ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.

அரசின் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை ஏற்று வீட்டிலேயே இருங்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் அடிக்கடி பேசுங்கள். காலையில் நேர்மறை எண்ணங்களோடு படுக்கையிலிருந்து எழுந்திருங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோருடனும் பேசிப்பேசி பயத்தை போக்கலாம். சுவாச பயிற்சியான பிராணாயாமம் செய்யுங்கள்'' என்றார்

நடிகை அனுஷ்கா கூறியதுபோன்று இன்றைக்கு மக்களைப் பயமுறுத்திவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையிலிருந்து விடுபடலாம் அதற்கு எல்லோரும் காலைவேளையில்" பிராணாயாமம்" எனும் மூச்சுப்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் மூச்சுப்பிரச்சினை ஏற்பட்டு ஆக்சிஜன் தேட வேண்டிய தேவை இருக்காது என நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 13 மே 2021