மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

சென்ராயனுக்கு கொரோனா!

சென்ராயனுக்கு கொரோனா!

மூடர்கூடம், மெட்ரோ, அல்டி, பஞ்சுமிட்டாய், லொடுக்கு பாண்டி, தண்ணில கண்டம், கொளஞ்சி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் சென்ராயன்.

நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் என்ற புது ஷோவில் பங்கேற்றார். அதில் அவர் ஜூலி உடன் சேர்ந்து நடனம் ஆடிஇருந்தார். நேற்றைய (12.05.2021) தினம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர், “மக்களே.. வணக்கம் மக்களே.. உண்மையிலேயே நடிக்கல ஆவி புடிச்சிட்டு இருக்கிறேன். வாழ்க்கையில் நான் அனைத்தையுமே பாசிட்டிவ் ஆக தான் எடுத்துக்கொள்வேன். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், சினிமாவில் ஜெயிக்க வேண்டும், உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நான் பாசிட்டிவ் ஆக தான் பார்ப்பேன். இப்போ எனக்கே கொரோனா பாசிட்டிவ் ஆகி போச்சு.

ஆரம்பத்தில் ரொம்ப அசால்ட்டா, ரொம்ப கேர்லெஸ் ஆக இருந்தேன். என்னையே இப்போது தாக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் மக்களே கவனமா இருங்கள். நான் தற்போது என்னுடைய வீட்டில் ஒரு அறையில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். மனைவி குழந்தை பக்கத்து அறையில் பத்திரமாக இருக்கிறார்கள். மனைவி மட்டும் அவ்வப்போது வந்து உணவு கொடுத்துவிட்டுச் செல்வார். கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் பெலோ. அதனால் எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

-இராமானுஜம்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

வியாழன் 13 மே 2021