மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

டாக்டர் ரிலீஸ் : கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் விளக்கம்!

டாக்டர் ரிலீஸ் : கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் விளக்கம்!

தமிழ் சினிமாவில் தயாரிப்பு, திரையிடல் என ஏற்கனவே திட்டமிட்ட அனைத்தும் கெரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக மாறிவருகின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வெளியீட்டுக்குக் காத்திருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.

இப்படத்தை ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யமுடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதையடுத்து இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடப்பதாகச் செய்திகள் வந்தன. இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு படக் குழுவினரிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

இந்நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “தினமும் டாக்டர் பட அப்டேட் கேட்டு பலரும் எங்களைத் தொடர்பு கொள்கிறீர்கள். முழு படமும் முடித்து கையில் ரெடியாக உள்ள நிலையில், கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமல், பல பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளோம். படம் நல்லபடியாக ரிலீஸ் ஆக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம், கொரோனா இரண்டாவது அலையில் சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்துகொண்டிருக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

புதன் 12 மே 2021