மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

ஜூனியர் என்.டி.ஆர், சுனைனாவுக்கு கொரோனா!

ஜூனியர் என்.டி.ஆர், சுனைனாவுக்கு கொரோனா!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பல நடிகைகள், நடிகர்கள் கடந்த வாரங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில், வீட்டுத் தனிமையில் உள்ளனர். இந்நிலையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தயவுசெய்து கவலை வேண்டாம்,நான் நலமாக இருக்கிறேன். என் குடும்பத்தினரும் நானும் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டோம். மருத்துவர்களின் கண்காணிப்பில் தேவையான வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். கடந்த சில நாட்களாக என்னுடன் நேரடித் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ள சுனைனாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பலத்த எச்சரிக்கையுடன் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் தொடர்பு கொள்ள வில்லை. அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனை” எனக் கூறியுள்ளார்.

-இராமானுஜம்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

செவ்வாய் 11 மே 2021