மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 மே 2021

அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்

அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி உள்பட பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.

படத்தை தீபாவளி வெளியீீடு என்று தயாரிப்பு தரப்பில் அறிவித்து இருந்தார்கள். கொரோனா இரண்டாவது அலையையும் பொருட்படுத்தாமல் ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் பலத்த கட்டுப்பாடுகளுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. கொரோனா இரண்டாவது அலை உருவானபோது அண்ணாத்த செட்டில் சிலருக்கு தொற்று ஏற்பட்டது போன்று இந்தமுறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்குள் பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைய உள்ளது. அதன் பின் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் அவர் சம்பந்தமான காட்சிகளுக்கான

டப்பிங் பேசுவதை உடனடியாக முடித்து கொடுக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான முன் ஏற்பாடுகளை செய்யுமாறு இயக்குனர் தரப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இப்படி ரஜினிகாந்த் வேகம் காட்டி வருவதற்கு காரணம் ஓய்வு எடுக்க அமெரிக்கா செல்ல முடிவு எடுத்திருப்பது தான் என்கிறார்கள் ரஜினி வட்டாரத்தில்.

ஆங்கில படமொன்றில் நடிக்க குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார் நடிகர் தனுஷ். அவர் ஜூன் மாத இறுதியில் இந்தியா திரும்புகிறார். அதனால் அண்ணாத்தபட வேலைகளை முடித்துவிட்டு அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த், தான் அடுத்து நடிக்க போகும் படத்திற்கான கதையை தனுஷிடம் கேட்க போகிறார் அத்துடன் அவர் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பாளர், இயக்குனர்களை மருமகன் தனுஷ், மகள் ஐஸ்வர்யாவுடன் விவாதித்து முடிவு எடுக்க இருக்கிறார் என்கின்றனர் ரஜினிகாந்த் வட்டாரத்தில்.

தீபாவளிக்கு திட்டமிட்டபடி அண்ணாத்த திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.

-இராமானுஜம்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

செவ்வாய் 11 மே 2021